தீவிரவாதத்தை ஆதரிக்கிறாரா கமல் ?

1 comments

தலைப்பை பார்த்தவுடனே ஏதோ சர்ச்சை உண்டாக்கும் பதிவு என்று யோசிக்க வேண்டாம்.கமல்ஹாசன் எப்போதுமே அவரின் படங்களில் மாறுபட்ட சிந்தனையை சொல்லக்கூடியவர்.அவர் எப்போதும் பக்கவாட்டு சிந்தனை கொண்டவர்.மற்றவர்களை போல் நேர்கோட்டு சிந்தனையுடையவர் அல்ல.அதற்கு அவருடைய படங்களே சாட்சி. உதாரணமாக ஹேராம், யாரும் பேசக்கூட தயங்ககூடிய விஷயத்தை படமாக எடுத்துக்காட்டியவர்.அந்த வரிசையில் இன்னும் சில தினங்களில் வெளிவர காத்திருக்கும்...

100 வார்த்தைகள் ஒரு பொருள் ( கடவுள் )

0 comments

   தமிழின் பெருமை என்ன என்று எனக்குள் ஒரு கேள்வி? "கல்தோன்றி மண் தோன்ற காலத்தே தோன்றியதா?" உலகப்பொதுமறை திருக்குறளா ? கணக்கில் அடங்காத இலக்கிய நூல்களா ? என்னவாக இருக்கும். இதோ என் அறிவுக்கு எட்டிய வரையில் ஒரு ஆய்வுக்கட்டுரை.என்னை பொறுத்தவரை தமிழின் பெருமை தமிழ் மொழியின் வார்த்தைகள் ,அதன் ஆழம்,அதை இலக்கியத்தில் கையாண்ட முறை. உதராணமாக இலை என்ற வார்த்தையை குறிப்பிட கொளுந்து,குருத்து,இலை,...

பாடல் பிறந்த கதை

0 comments

இந்தப் பதிவில் கவிஞரின் வாழ்க்கையில் நடந்த இரண்டு சுகமான அனுபவங்களை பார்ப்போம். 1972 கவியரசர் தனது மகளின் திருமணத்திற்காக ஆயத்தமாகிக் கொண்டு இருந்த சமயம் இன்னும் திருமணத்திற்கு சில தினங்களே இருந்த நிலையில் தனக்கு பணம் தருவதாக சொன்ன நபர் பணம் தரவில்லை.தன் மகளின் திருமணம் என்னவாகும் என்று கண்கள் கலங்கி கடவுளை வேண்டினார். அந்த சமயம் தேவர் பிலிம்ஸின் தெய்வம் படத்துக்கு பாடல்களை எழுத அழைப்பு வந்தது.கவிஞர்...

கண்ணதாசனும் அரசியலும்

0 comments

இந்த பதிவில் கண்ணதாசன் அரசியல் அனுபவங்கள் அதை அவர் பாடலில் வெளிபடுத்தும் விதம் ஆகியவற்றை காண்போம். ஒரு சமயம் தேர்தலில் தோல்வியுற்றபோது தனது சோகத்தை ஒரு பாடலில் வெளிபடுத்தியிருப்பார். பலே பாண்டியா படத்தில் அந்த பாடல் வரும் யாரை எங்கே வைப்பது என்று பேதம் பிரியலே அண்டகாக்கைக்கும் குயில்களுக்கும் பேதம்பிரியலே பேரெடுத்து உண்மையை சொல்லி பிழைக்கமுடியலே இப்ப பீடிகளுக்கும் ஊதுபத்திக்கும் பேதம்புரியலே நானிருக்கும்...

அண்ணாவின் நட்பு

3 comments

கண்ணதாசனின் அரசியல் பிரவேசத்தில் அண்ணா ஒரு முக்கியமான நபர். அண்ணாவுடன் எவ்வளவு நெருக்கமாக இருந்தாரோ அவ்வளவு சண்டையும் போட்டுள்ளார்.திராவிட முன்னேற்ற கழகம் என்பது அண்ணாவிற்கு தாய் வீடு போன்றதாகும்.பலமுறை சண்டைபோட்டு பிரிந்துள்ளார்.1962 அண்ணாவிடம் சண்டையிட்டு கட்சியை விட்டு வெளிவந்த சமயம் "படித்தால் மட்டும் போதுமா" படத்தில் ஒரு பாடலில் அண்ணாவுடன் கொண்ட பிரிவையும் ஏமாற்றத்தையும் வெளிபடுத்துவார். அண்ணன்...

கண்ணதாசனும் காமராஜரும் - பாகம் 2

0 comments

சென்ற பதிவில் காமராஜருடன் கொண்ட நட்பையும் அவருக்காக அவர் எழுதிய பாடலையும் பார்த்தோம்.காமராஜர் மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதே கண்ணதாசன் விரும்பினார். பட்டிக்காட பட்டணமா  என்ற படத்தில் ஒரு பக்தி பாடல் அம்பிகையே ஈஸ்வரியே எனை ஆழவந்த கோவில் கொண்ட முத்துமாரி என்ற பாடலில் காமராஜர் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை அழகாக பக்திப் பாடலில் வெளிபடுத்தியிருப்பார்.   படம்...

கண்ணதாசனும் காமராசரும் பாகம் - 1

1 comments

இந்த பதிவில் கண்ணதாசனின் அரசியல் பிரவேசத்தை பற்றிக் காணலாம். அவர் எவ்வளவோ கட்சியில் இருந்துள்ளார்.அரசியில் பிரவேசம் அவருக்கு அவ்வளவாக திருப்தி அளிக்கவில்லை. அவர் இல்லாத கட்சிகளை இல்லை எனலாம்.நம் கவிஞர் தன் சொந்த வாழ்க்கையில் நடந்த அனுபவங்களை பாடலில் எழுதுவதில் வித்தகர். அந்த பாடலின் சூழ்நிலையை மறந்து இவர் வாழ்க்கை சம்பவத்தை மட்டும் நினைத்து அந்த பாடலை பார்த்தல் அந்த பாடல் மிகவும் சுவாரஸ்யமாக...

கோவையை பற்றி கண்ணதாசன்

0 comments

கண்ணதாசன் எல்லாவற்றையும் அனுபவித்து எழுதும் அற்புத கவிஞர். அவர் கோயம்புத்தூர் மக்களின் பண்பு,பேச்சுவழக்கு ,விருந்தோம்பலை பற்றி ஒரு கவிதையில் எழுதியுள்ளார். கோவை மக்கள் எப்போதும் மரியாதையுடன் பேசுவார்கள்.அவர்களின் பேச்சு வழக்கில் மரியாதை மிக அதிகமா இருக்கும்.உதாரணமாக வாங்க,போங்க,உட்காருங்க,சாப்பிடுங்க,தூங்குங்கா,வேணுங்க,ஆமாமுங்க என்பவை.உணவு உபசரிப்பிற்கும் மிகவும் பெயர் பெற்ற ஊர் கோயம்புத்தூர்.  நான்...

கண்ணதாசனின் அனுபவங்கள்

0 comments

இந்த பதிவில் எனக்கு பிடித்த கண்ணதாசனின் கவிதையை காண்போம். எல்லா கவிஞர்களும் சூழ்நிலையை உள்வாங்கி உணர்ந்து மக்களுக்கு பாடலாக படைக்கிறார்கள் ஆனால் நம் கவிஞரோ அதை அனுபவித்து மக்கள் தமிழில் எழுதியவர். இன்னும் பல ஆண்டு கழித்து இந்த கவிதையை படித்தாலும் புதியதாய் படிப்பது போல் தோன்றும். இதோ இந்த கவிதை பிறப்பின்  வருவது யாதெனக் கேட்டேன்  பிறந்து  பாரென இறைவன் பணித்தான்...

திரையிசையில் முதியோர் காதல்

0 comments

காதல் ஒரு மந்திரச்சொல்.இயற்கையின் உபாதை.சொர்கத்தின் திறவுகோல். ஆர்மோன்களின் பனிப்போர்..மலிவாய் கிடைக்கும் போதை.நம் யுவன் யுவதிகளுக்கு எப்படி வேண்டுமானாலும் தோன்றலாம் ஆனால் 30 ஆண்டுக்கலாம் வாழ்ந்த தம்பதிகளுக்கு இது ஒரு தவம். தள்ளாத வயதில் கட்டிலோடு கட்டிலாக நோயோடு உறவாடும் முதியவரின் காதலில் நான் ரசித்த வரிகள் .... . கண்ணதாசன் : கண்ணதாசன் மனைவிக்கு காது கேட்காது. மனைவியை பற்றி அவர் எழுதிய...

கண்ணதாசன் - சுயவிமர்சனம்

1 comments

 ஒருவர் தன்னை தானே சுயவிமர்சனம்  செய்வது அவ்வளவு எளியது அன்று. கண்ணதாசன் தன்னுடைய மனதில் உள்ளவற்றை அப்படியே வெளிபடுத்துவார்.அவர் யோசித்து எளிதிய பாடல்களைவிட அனுபவித்து எழுதியவை மிக அதிகம்.அவர் தன்னை தானே சுயவிமர்சனம் செய்தவற்றில்    நான் ரசித்த வரிகள். நானிடறி விழுந்தயிடம் நாலாயிரம் அதிலும் நான் போட்ட முட்கள் பதியும் நடைபாதை வணிகன்னென்று நான் கூவி விற்ற பொருள் நல்ல பொருளில்லை...

விருந்தோம்பல் (குடும்ப விளக்கு)

0 comments

நம் தமிழரின் வீரம்,கொடை,மானம் போன்ற முக்கியமான பண்புகளை போலவே மறைக்கப்பட்ட/மறுக்கப்பட்ட முக்கிய பண்பு விருந்தோம்பல்.Pizza மற்றும் buffet கலாச்சாரத்திற்கு மாறி விட்ட நம்மால் இதை பெரியதாக உணர முடியாது.நாம் தொலைத்து விட்ட அடையாளங்களில் ஓன்று விருந்தோம்பல். நம் கலாச்சாரத்தை,தமிழரின் வாழ்க்கையை விளக்கும் நூல்/பதிவு குடும்ப விளக்கு.விருந்தினரை எப்படி உபசரிக்க வேண்டும் என்று பாரதிதாசன் விளக்குகிறார். இதை...

 
  • தமிழ் ஆவணம்