தலைப்பை பார்த்தவுடனே ஏதோ சர்ச்சை உண்டாக்கும் பதிவு என்று யோசிக்க வேண்டாம்.கமல்ஹாசன் எப்போதுமே அவரின் படங்களில் மாறுபட்ட சிந்தனையை சொல்லக்கூடியவர்.அவர் எப்போதும் பக்கவாட்டு சிந்தனை கொண்டவர்.மற்றவர்களை போல் நேர்கோட்டு சிந்தனையுடையவர் அல்ல.அதற்கு அவருடைய படங்களே சாட்சி. உதாரணமாக ஹேராம், யாரும் பேசக்கூட தயங்ககூடிய விஷயத்தை படமாக எடுத்துக்காட்டியவர்.அந்த வரிசையில் இன்னும் சில தினங்களில் வெளிவர காத்திருக்கும் படம்தான் விஸ்வரூபம்.
இது தீவிரவாதத்தை பற்றிய படம் என்பது எல்லோருக்கும் தெரியும்.சில மதாங்களுக்கு முன்னால் நடந்த விஜய் அவார்ட்ஸ் விழாவில் இந்த படத்தை பற்றி ஒரு வரியில் சொல்லுங்களேன் என்றதற்கு நான் சொல்லாவிட்டாலும் பாடல் வெளிவந்தவுடன் வைரமுத்துவின் வரிகள் கதையை சொல்லிவிடும் என்றார். பாடல்களும் வெளியாகிவிட்டது.அதில் இரண்டு பாடல்கள் கதையை ஓரளவு சொல்லாமல் சொல்கின்றன. அந்த பாடல்களை பாடியவர் கமலஹாசன். இன்று மக்கள் பொதுவாக நேர்கோட்டு சிந்தனையுடையவராக இருக்கிறார்கள்.ஊடகங்களின் கண்கள் வழியாகத்தான் இந்த உலகத்தை பார்கிறார்கள். அது ஒரு அரசியல் நிகழ்சியாக இருந்தாலும் சரி, இல்லை சினிமாவாக இருந்தாலும் சரி இதே நிலைதான்.
இதோ அந்த பாடல் வரிகள்
துப்பாக்கி எங்கள் தோளிலே
துர்பாகியம் தான் வாழ்விலே
எப்போதும் சாவு நேரிலே
இப்போது வெல்வோம் போரிலே
போர்களை நாங்கள் தேர்ந்தேடுகவில்லை
போர்தான் எம்மை தேர்தெடுத்து கொண்டது
எங்களின் கையில் ஆயுதங்கள் இல்லை
ஆயுதத்தின் கையில் எங்கள் உடல் உள்ளது
ஊரை காக்கும் போருக்கு ஒத்திகை செய்கின்றோம்
சாவே எங்கள் வாழ்வென்று சத்தியம் செய்கின்றோம்
ஒட்டகமுதுகின் மேல் ஒரு சமவெளி கிடையாது
டாலர் உலகத்தில் சமதர்மம் கிடையாது
நீதி காணாமல் போர்கள் ஓயாது
துப்பாக்கி எங்கள் தோழனே
தோல்கொண்ட வீரன் தெய்வமே
எப்போதும் எங்கள் கோப்பையே
தண்ணீரு பருகும் மரணமே
பூமியை தாங்க புஜவீரன் கேட்கின்றோம்
புயலை சுவாசிக்க நுரையீரல் கேட்கின்றோம்
எக்கு திசைகளால் ஒர் இதயம் கேட்கின்றோம்
இருனூரண்டு இளமை கேட்கின்றோம்
துப்பாக்கி எம் தலையனையாய் தூங்கி திரிகின்றோம்
தோளோடு எம் மரணத்தை தூக்கி திரிகின்றோம்
துர்பாகியம் தான் வாழ்விலே
எப்போதும் சாவு நேரிலே
இப்போது வெல்வோம் போரிலே
போர்களை நாங்கள் தேர்ந்தேடுகவில்லை
போர்தான் எம்மை தேர்தெடுத்து கொண்டது
எங்களின் கையில் ஆயுதங்கள் இல்லை
ஆயுதத்தின் கையில் எங்கள் உடல் உள்ளது
ஊரை காக்கும் போருக்கு ஒத்திகை செய்கின்றோம்
சாவே எங்கள் வாழ்வென்று சத்தியம் செய்கின்றோம்
ஒட்டகமுதுகின் மேல் ஒரு சமவெளி கிடையாது
டாலர் உலகத்தில் சமதர்மம் கிடையாது
நீதி காணாமல் போர்கள் ஓயாது
துப்பாக்கி எங்கள் தோழனே
தோல்கொண்ட வீரன் தெய்வமே
எப்போதும் எங்கள் கோப்பையே
தண்ணீரு பருகும் மரணமே
பூமியை தாங்க புஜவீரன் கேட்கின்றோம்
புயலை சுவாசிக்க நுரையீரல் கேட்கின்றோம்
எக்கு திசைகளால் ஒர் இதயம் கேட்கின்றோம்
இருனூரண்டு இளமை கேட்கின்றோம்
துப்பாக்கி எம் தலையனையாய் தூங்கி திரிகின்றோம்
தோளோடு எம் மரணத்தை தூக்கி திரிகின்றோம்
இந்த பாடலை கேட்டாலே அது உங்களுக்கு புரிந்து இருக்கும்.தீவிரவாதத்தில் இரண்டு வகை உண்டு. ஒன்று பாகிஸ்தான் போன்ற நாடுகள் மற்ற நாட்டின் வளர்ச்சியை சீர்குலைக்க பண்ணுகின்ற தீவிரவாதம் அது முற்றிலும் களைய பட வேண்டும்.அதில் மாற்று கருத்தில்லை.இன்னொரு வகை வல்லரசு நாடுகள் ஒரு நாட்டின் செல்வத்தையும் பெட்ரோலையும் சுரண்ட தீவிரவாத அடக்கு முறை என்று இராக்கிலும்,அப்கானிஸ்தானிலும் சென்று மக்களை கொன்று குவித்து பெட்ரோல் கிணறுகளை தன்வசப்படுத்தி மக்களை கொன்று குவித்து சர்வாதிகாரம் நடத்தி வருகின்றன.
அங்குள்ள மக்கள் நாட்டிற்காகவும் தற்பாதுகாப்புகாகவும் போராடுவது ஒருவகை தீவிரவாதம்.எப்படி விடுதலை புலிகளின் செயல்கள் நியாயமாக படுகிறதோ அதுபோல் அவர்களின் செயல்களும் நியாயமானதே.இங்குள்ள ஊடகங்கள் இவர்களை தியாகிகளாகவும் அவர்களை தீவிரவாதிகளாகவும் சித்தரிகின்றன. இந்த பிரச்சனையை வேறு கோணத்தில் அவர்களின் நியாத்தையும் சொல்லுகின்ற படமாக விஸ்வரூபம் இருக்கும் என்பது என் யூகம். http://tamilaavanam.blogspot.com
Nice critism abt viswaroobam, keep going forward to post review with more good image based on films.
ReplyDelete