திரையிசையில் முதியோர் காதல்

காதல் ஒரு மந்திரச்சொல்.இயற்கையின் உபாதை.சொர்கத்தின் திறவுகோல். ஆர்மோன்களின் பனிப்போர்..மலிவாய் கிடைக்கும் போதை.நம் யுவன் யுவதிகளுக்கு எப்படி வேண்டுமானாலும் தோன்றலாம் ஆனால் 30 ஆண்டுக்கலாம் வாழ்ந்த தம்பதிகளுக்கு இது ஒரு தவம்.
தள்ளாத வயதில் கட்டிலோடு கட்டிலாக நோயோடு உறவாடும் முதியவரின் காதலில் நான் ரசித்த வரிகள் ....

முதியோர் காதல்
.
கண்ணதாசன் : கண்ணதாசன் மனைவிக்கு காது கேட்காது. மனைவியை பற்றி அவர் எழுதிய வரிகள்...

செவிகள் பழுதனாலும் தன் சேவை திறத்தல்
என் கவிகள் பழுதாகாமல் காத்து வந்த ராசாத்தி...

அவர் ஆடாத ஆட்டம் இல்லை.அவர் ஊரெல்லாம் சுற்றி மது மற்றும் மாதுவில் சரணடைத்து கடைசியில் நோயுற்று எழுதிய வரிகள்.

கட்டிலும் மெத்தையிலும் காலமறியாதிருந்து
கற்பனைகள் கொண்டதொரு காலம்
இன்று நோய்வழியில் வந்ததடி ஞானம்...

முத்தமென்றும் மோகமென்றும் சத்தமென்றும்
சத்தமிட்டு சத்தமிட்டு புத்திகெட்டு போனது -ஒருகாலம்
இன்று ரத்தமற்று போனபின்பு ஞானம்...

பொன்னிநதி அவ்வளவும் போனரத்தம் போனபின்பு
கன்னியரை யேசுதடி நெஞ்சம் இது
காலிடறி யானை விழும் பள்ளம் ....

வாழ்க்கையில் ஓயாது வேலை செய்து கடைசியில் எல்லா உறவையும் இழந்து தள்ளாத வயதில் தன் மனைவியுடன் பாடுவது போல் அமைந்த வரிகள் ... மனைவியின் அருமையை உணரும் வரிகள். "வியட்நாம் வீடு" படத்தில் வரும் வரிகள்...

முதியோர் காதல்
கால சுமைதாங்கி போலே மார்பில் எனைதாங்கி
வீழும் கண்ணீர் துடைத்தாய் அதில்
ஏன் விம்மல் தணியுமடி

 ஆழம் விழுதுகள்போல் உறவு ஆயிரம்
 இருந்தும் என்ன வேறென நீயிருந்தாய்
 அதில் வீழ்ந்து விடாதிருந்தேன்

தன் மனைவி இறப்புக்கு பின் கணவனின் நிலையை விளக்கும் வரிகள்...

தந்தை வாழ்வு முடிந்துபோனால்
தாயின் மஞ்சள் நிலைபதில்லை

தாயின் வாழ்க்கை முடிந்துபோனால்
தந்தைக்குகென்று வாழ்க்கை ஒன்றுமில்லை ..

வைரமுத்து - தன் வெற்றிக்கு மனைவிதான் காரணம் என்பதை திருக்குறள்போல் வைரமுத்து எழுதிய வரிகள்


காரியம் யாவும் என்கண்மணி பார்ப்பதால்
சூரிய கவிஞராய் சுற்றி வருகிறேன் ..

மீண்டும் ஒரு புதிய பதிவில் சந்திப்போம்.

0 comments:

Post a Comment

 
  • தமிழ் ஆவணம்