கண்ணதாசனும் காமராசரும் பாகம் - 1

இந்த பதிவில் கண்ணதாசனின் அரசியல் பிரவேசத்தை பற்றிக் காணலாம். அவர் எவ்வளவோ கட்சியில் இருந்துள்ளார்.அரசியில் பிரவேசம் அவருக்கு அவ்வளவாக திருப்தி அளிக்கவில்லை. அவர் இல்லாத கட்சிகளை இல்லை எனலாம்.நம் கவிஞர் தன் சொந்த வாழ்க்கையில் நடந்த அனுபவங்களை பாடலில் எழுதுவதில் வித்தகர்.

அந்த பாடலின் சூழ்நிலையை மறந்து இவர் வாழ்க்கை சம்பவத்தை மட்டும் நினைத்து அந்த பாடலை பார்த்தல் அந்த பாடல் மிகவும் சுவாரஸ்யமாக புதிய வடிவில் தெரியும். கவிஞர் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளி வந்த சமயம் அவருக்கு "பட்டினத்தில் பூதம்" படத்தில் ஒரு பாடல் எழுத நேர்ந்தது.ஒரு காதலி காதலனை பார்த்து பாடுவதாக அமைந்த அந்த பாடல்.ஒரு காதல் பாடல்தான் ஆனால் அவர் தன்னுடைய சொந்த வாழ்க்கையின் கருத்துக்களை அதில் படைக்கின்றார். 


காமராஜர்

அவர் காங்கிரசிலிருந்து வெளியேறினாலும் காமராஜர் மீதும் அவருடைய ஆளுமை மீதும் தீராத மரியாதையை உடையவர். அதை அந்த பாடலில் வெளிபடுத்துவார்.காமராஜரின் தாயார் பெயர் சிவகாமி. காமராஜருக்கு சொல்ல வேண்டிய செய்தியை அந்தப் பாடலில் குறிப்பால் உணத்துவார். அந்தப் பாடலில் நான் ரசித்த வரிகள் 


Kannadasan Songs


படம் : பட்டினத்தில் பூதம்
சூழ்நிலை : டூயட் பாடல்அந்த சிவகாமி மகனிடம் சேதிசொல்லடி
என்னை சேரும் நாள் பார்க்க சொல்லடி
வேறு எவரோடு நான்பேச வார்த்தையேதடி
வேலன் இல்லாமல் தோகையேதடி ...

நிலையில் மாறினால் நினைவும் மாருமோ 
நெஞ்சங்கள் நெருங்கினால் பேதங்கள் தோன்றுமோ 
மாறாது மாறாது இறைவன் ஆணை...


இந்த பாடல் முருகனை புகழ்ந்து எழுதுவது போன்று அமைய வேண்டிய பாடல்.ஆனால் அவர் தன்னுடைய நிலையையும் அழகாக விளக்கியிருப்பார்.

இதே போல் இன்னொரு சமயம் காமராஜர் ஒரு கருத்தரங்குகாக "United Nations" இருந்து அழைக்கப்பட்டிருந்தார்.காமராஜர் படிப்பறிவில்லாதவர் அதனால் எப்படி அங்கு செல்ல முடியும் என பலர் நினைத்தனர் ஆனால் அவருடைய தாழ்வு மனப்பான்மையை போக்கி அவருக்கு ஊக்கம் அளிப்பது போன்ற பாடலை "மாகாகவி காளிதாஸ்" படத்திற்காக எழுதியிருப்பார்.

இந்தப் பாடல் படத்தின் சூழ்நிலைக்கும் பொருந்தும் அதை போல் காமராஜரின் வாழ்க்கைக்கும் பொருந்துவதாக அமைந்த அந்த பாடலில்

Kannadasan Songs


 நான் ரசித்த வரிகள்

சென்று வா மகனே ! சென்றுவா ! - அறிவை
வென்று வா மகனே ! வென்று வா !
அறிவுலகம் உன்னை அழைக்கின்றது - ஏதும்
அறியாதவன் என்றே நினைக்கின்றது

அரண்மனை வாசல் திறக்கின்றது - அங்கே
ஆணவம் புன்னகை புரிகின்றது
உண்மையை சொல்வதற்கு படிப்பெதற்கு ? - எல்லாம்
உணர்ந்தவர் போல் நடிக்கும் நடிப்பெதற்கு ?!

கண் கண்ட காட்சி கட்கு விளக்கெதற்கு ? நெஞ்சில்
கள்ளமில்லாதவர்க்கு பயமெதற்கு ? !

காமராஜருக்கு சொல்ல நினைத்ததை அழகாக இந்த பாடலில் எழுதியிருப்பார்.

அடுத்த பதிவில் வேறு சில பாடல்கள் உருவான விதத்தை விளக்குகின்றேன். மீண்டும் சந்திப்போம்.

1 comments:

 
  • தமிழ் ஆவணம்