பாடல் பிறந்த கதை

இந்தப் பதிவில் கவிஞரின் வாழ்க்கையில் நடந்த இரண்டு சுகமான அனுபவங்களை பார்ப்போம். 1972 கவியரசர் தனது மகளின் திருமணத்திற்காக ஆயத்தமாகிக் கொண்டு இருந்த சமயம் இன்னும் திருமணத்திற்கு சில தினங்களே இருந்த நிலையில் தனக்கு பணம் தருவதாக சொன்ன நபர் பணம் தரவில்லை.தன் மகளின் திருமணம் என்னவாகும் என்று கண்கள் கலங்கி கடவுளை வேண்டினார்.

அந்த சமயம் தேவர் பிலிம்ஸின் தெய்வம் படத்துக்கு பாடல்களை எழுத அழைப்பு வந்தது.கவிஞர் தன் சொந்த பிரச்சனையை மறந்து பாடலை எழுத ஆரம்பித்தார்.கவிஞர் ஒரு கண்ணன் பக்தன் என்பது எல்லோருக்கும் தெரியும்.இந்தப்பாடல் முருகனைப்பற்றி எழுத வேண்டிய பாடல்.அவர் அந்த பாடலை தன் உதவியாளருக்கு சொல்லிக்கொண்டு இருந்தார் அவரும் அந்த வரிகளை பிரதி எடுத்துக்கொண்டு இருந்தார்.

அப்போது பக்கத்து அறையில் இருந்த தேவர் அந்த வரிகளை கவனித்தார்.கண்ணதாசனுடன் மிக நெருக்கமாக பழகியவருக்கு அவரின் மனநிலை அவர் பாடலில் வெளிபடுத்துவார் என்பது தெரியும்.



Kannadasan,Sivaji


மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம்காக்கும் வேலய்யா

என்ற பாடலில் "தேவரின் குலம்காக்கும் வேலய்யா" என்ற வரியை மிகவும் மகிழ்ந்து ரசித்து பாராட்டிய தேவர் அவரின் வரிகள் ஏதோ குறிப்பால் உணர்த்துகின்றன என்பதை அறிந்து அவரின் நிலையை அறிந்து 1 லட்சம் ரூபாயும் தனது கல்யாண மண்டபத்தில் திருமணத்தை நடத்திக்கொள்ள அனுமதியும் கொடுத்தார். அவர் செட்டியார் குலத்தை சேர்த்தவர்.செட்டியார் குலத்தில் முருகனை குலதெய்வமாக வழிபடுவார்கள்.தான் என்னதான் கண்ணனின் பக்தனாக இருந்தாலும் அவருடைய குலதெய்வமான முருகன்தான் இந்த சூழ்நிலையில் காப்பாற்றினார் என்று உளமாற மகிழ்ந்தார்.

இன்னொரு சமயம் பீம்சிங் இயக்கத்தில் நம் கவிஞர் பாவா மன்னிப்பு படத்திற்காக பாடல் எழுத அமர்த்திருந்தார். அவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.அவர் அந்த தொலைபேசி அழைப்பில் பேசி விட்டு அமர்ந்தார்.MSV அவர்கள் நம் கவிஞரின் முகத்தை பார்த்தவுடன் ஏதோ ஒன்று நடந்து இருக்கிறது என்பதை உணர்த்தார்.பாடலுக்கான சூழ்நிலையை இயக்குனர் சொல்லிக்கொண்டு இருந்தார். கவிஞரின் முகம் வாடி இருந்ததை உணர்ந்த MSV அவர்கர் என்ன கவிஞரே ஏதாவது பிரச்னையா என்று கேட்டார் அதற்கு நம் கவிஞர் சிரித்துக்கொண்டே ஒன்றும் இல்லை என்று பதில் அளித்தார். 

கதையையும் சூழ்நிலையும் கேட்டவுடன் பாடலை எழுதி முடித்து பணத்தை பெற்று கொண்டு அவசரமாக கிளம்பினர். MSV தன்னுடைய காரில் அவரை இறக்கிவிட்டு மறுபடியும் கேட்டார் என்ன ஏதாவது பிரச்சனையா என்று. அப்போது நடந்தவற்றையெல்லாம் MSV யிடம் சொன்னார் நம் கவிஞர்.அவருக்கு வந்த தொலைபேசி அழைப்பில் கடன் தொல்லையால் அவருடைய வீட்டை சப்தி செய்ய நோட்டீஸ் வந்திருப்பதாகவும் வீட்டு பொருட்களை எடுத்து கொண்டு போகுமாறு சொல்லிருகிறார்கள். இந்த சூழ்நிலையில் எப்படி ஒருவரால் சிந்திக்க முடியும் ஆனால் நம் கவினரோ வழக்கம் போல தன் நிலையை இந்த பாடலில் எழுதியிருப்பார்.





 படம் : பாவா மன்னிப்பு

சிலர் சிரிப்பார் சிலர் அழுவார்
நான் சிரித்துக்கொண்டே அழுகின்றேன்
சிலர் அழுவார் சிலர் சிரிப்பார்
நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்

காலம் ஒருநாள் மாறும்
நம் கவலைகள் யாவும் தீரும்
வருவதை எண்ணி சிரிக்கின்றேன்
வந்ததை எண்ணி அழுகின்றேன்

இந்த பாடல்வரிகளில் மிக சிறப்பானது "வந்ததை எண்ணி அழுகின்றேன்" என்பது அவருக்கு வந்த பிரச்னையும் "வருவதை எண்ணி சிரிக்கின்றேன்" என்பது இந்த பாடல் எழுதியதால் வரக்கூடிய பணத்தையும் நினைத்து எழுதிய வரிகள்.இந்த பாடலால் வந்த பணத்தை வைத்து அந்த வீட்டு பிரச்னையில் இருந்து வெளிவந்தார். இவ்வாறு ஒவ்வொரு பாடலிலும் தன் வாழ்க்கையை எழுதியவர் நம் கவிஞர். 

 மீண்டும் இன்னொரு பதிவில் சந்திப்போம்

0 comments:

Post a Comment

 
  • தமிழ் ஆவணம்