இந்த பதிவில் கண்ணதாசன் அரசியல் அனுபவங்கள் அதை அவர் பாடலில் வெளிபடுத்தும் விதம் ஆகியவற்றை காண்போம். ஒரு சமயம் தேர்தலில் தோல்வியுற்றபோது தனது சோகத்தை ஒரு பாடலில் வெளிபடுத்தியிருப்பார்.
பலே பாண்டியா படத்தில் அந்த பாடல் வரும்
பலே பாண்டியா படத்தில் அந்த பாடல் வரும்
யாரை எங்கே வைப்பது என்று பேதம் பிரியலே
அண்டகாக்கைக்கும் குயில்களுக்கும் பேதம்பிரியலே
பேரெடுத்து உண்மையை சொல்லி பிழைக்கமுடியலே
இப்ப பீடிகளுக்கும் ஊதுபத்திக்கும் பேதம்புரியலே
நானிருக்கும் இடத்தினிலே அவன் இருக்கின்றான்
அவனிருக்கும் இடத்தினிலே நானிருக்கின்றேன் -நாளை
எங்கை யாரிருப்பார் அதுவும் தெரியலே
நல்லவனுக்கும் கெட்டவனுக்கும் பேதம் பிரியலே

தான் அரசியலில் தோல்வியுற்ற போது அதை தாங்கி கொள்ள முடியாமல் தன் ஆதங்கத்தை இந்த பாடலில் எழுதியிருப்பார்.தன் கோபத்தை இப்படி நாகரீகமாக வெளிக்காட்டுவது அவருடைய பண்பு.அவர் இறந்து 32 ஆண்டுகளுக்கு பிறகும் அவரின் பாடலின் வரிகளை இன்று பேசுகின்றோம் என்றால் அந்த அளவுக்கு காலத்தை வென்ற கவிஞர் அவர்.
இதே போல் 1962 ஆண்டு தற்காலிகமாக அரசியலை விட்டு விலகியிருக்கலாம் என்று கவிஞர் முடிவு செய்தார்.அப்போது தனக்கு ஏற்பட்ட அவமரியாதையும் தோல்வியையும் ஆலய மணி என்ற படத்தில் வரும் சட்டி சுட்டதடா பாடலில் எழுதியிருப்பர்.
அந்த பாடலில் நான் ரசித்த வரிகள்

சட்டி சுட்டதடா கை விட்டதடா
புத்தி கெட்டதடா நெஞ்சை தொட்டதடா
நாலு நடந்து முடிந்த பின்னால்
நல்லது கெட்டது தெரிஞ்சதடா
ஆரவார பேய்களெல்லாம் ஓடிவிட்டதடா
ஆலய மணியோசை கூடிவிட்டதடா
புத்தி கெட்டதடா நெஞ்சை தொட்டதடா
நாலு நடந்து முடிந்த பின்னால்
நல்லது கெட்டது தெரிஞ்சதடா
ஆரவார பேய்களெல்லாம் ஓடிவிட்டதடா
ஆலய மணியோசை கூடிவிட்டதடா
இவ்வாறு தனக்கு ஏற்படும் அனுபவங்களை ஏதோ ஒரு டைரியில் எழுதி வைக்காமல் மக்கள் ரசிக்க திரை இசையில் எளிய தமிழில் எழுதுவது என்பது அவருடைய பாணி.இதனால் இந்த பாடல்கள் என்றும்
உயிர் பெற்று நிற்கின்றன. சூழ்நிலையை உள்வாங்கி எழுதுவதை விட தனது அனுபவங்களை அந்த சூழ்நிலைக்கு ஏற்றவாறு எழுதுவது அவருடைய சிறப்பு.
மீண்டும் இன்னொரு பதிவில் வேறு சில பாடல்களுடன் சந்திப்போம்.
மீண்டும் இன்னொரு பதிவில் வேறு சில பாடல்களுடன் சந்திப்போம்.
0 comments:
Post a Comment