இந்தப் பதிவில் MGR ம் கண்ணதாசனும் இணைந்து பணியாற்றிய இரண்டு சுவையான பாடல்களை பார்ப்போம்.கண்ணதாசனும் MGR ம் மிகச்சிறந்த நண்பர்கள்.இருவரும் ஒரே கட்சியில் பணியாற்றியவர்கள்.1972 ம் ஆண்டு பொது இடங்களில் குடிப்பதற்கான தடை நீக்கப்பட்டிருந்தது அதனால் ஆண்கள் குடிபோதையில் அடிமையாகி குடும்பங்களை மறந்து திரிகிறார்கள் என்று நிறைய பெண்கள் MGR இடம் முறையிட்டனர்.MGR அந்த காலத்தில் தன் படங்களில் சமூக பிரச்சனையை தீர்ப்பது போன்ற காட்சியில் அதிகம் நடிப்பார்.
தன் அரசியல் பிரவேசத்திற்கு சினிமாவை ஒரு மிகச் சிறந்த கருவியாக MGR பயன்படுத்தினார்.MGR குடிப்பழக்கத்திற்கு எதிரான தன் கருத்தை படத்தில் பாடலாக வைக்க வேண்டும் என நினைத்தார்.இந்த பாடலை நம் கவிஞரை விட யாராலும் எழுத முடியாது என்று நினைத்து அவரிடம் இந்த பாடலை எழுத சொன்னார்.நம் கவிஞரோ எப்போதும் போதையில் இருப்பவர் அதனால் தான் எப்படி இந்த பாடலை எழுத முடியும் என யோசித்தார்.இருந்தாலும் MGR ன் அன்புக் கட்டளையும் தட்ட முடியவில்லை.
அந்த சூழ்நிலையில் அவர் எழுதிய பாடல்தான் "சிலர் குடிப்பவர் போலே நடிப்பார் சிலர் நடிப்பவர் போலே குடிப்பார்" எனத் தொடங்கும் பாடல். இந்தப் பாடலில் குடியால் ஏற்படுகின்ற தீமையும் சொல்லியிறுப்பார் அதே சமயம் குடியால் ஏற்படுகின்ற அனுபவத்தையும் மறைமுகமாக சொல்லியிறுப்பார்.
படம் : சங்கே முழங்கு
இசை : MSV
பாடியவர் : TMS
சிலர் குடிப்பதுபோலே நடிப்பார் சிலர் நடிப்பதுபோலே குடிப்பார்
சிலர் பாட்டில் மயங்குவார் சிலர் பாட்டலில் மயங்குவார்
மதுவுக்கு ஏது ரகசியம் அந்த மயக்கத்தில் எல்லாம் அவசரம்
மதுவில் விழுந்த வார்த்தையை மறுநாள் கேட்பது அவசியம்
நானமில்லை வெட்கமில்லை போதையேறும்போது
நல்லவனும் தீயவனே கோப்பையேந்தும்போது
புகழிலும் போதையில்லையே பிள்ளை மழழையில் போதையில்லையே
காதலில் போதையில்லையே நெஞ்சில் கருணையில் போதையில்லையே
மனம்,மதி,அறம்,நெறி தரும் சுகம் மதுதருமோ
நீ நினைக்கும் போதைவரும் நன்மைசெய்துபாரு
நிம்மதியை தேடி நின்றால் உண்மை சொல்லிப்பாரு
சிலர் பாட்டில் மயங்குவார் சிலர் பாட்டலில் மயங்குவார்
மதுவுக்கு ஏது ரகசியம் அந்த மயக்கத்தில் எல்லாம் அவசரம்
மதுவில் விழுந்த வார்த்தையை மறுநாள் கேட்பது அவசியம்
நானமில்லை வெட்கமில்லை போதையேறும்போது
நல்லவனும் தீயவனே கோப்பையேந்தும்போது
புகழிலும் போதையில்லையே பிள்ளை மழழையில் போதையில்லையே
காதலில் போதையில்லையே நெஞ்சில் கருணையில் போதையில்லையே
மனம்,மதி,அறம்,நெறி தரும் சுகம் மதுதருமோ
நீ நினைக்கும் போதைவரும் நன்மைசெய்துபாரு
நிம்மதியை தேடி நின்றால் உண்மை சொல்லிப்பாரு
கவிஞரை பொறுத்தவரை குடிப்பது என்பது தனி மனித ஒழுக்கம் சார்ந்த பிரச்சனை அது எந்த விதத்திலும் சமுதாயத்தை பாதிக்காது என்பது அவரது கருத்து. எல்லாவற்றிலும் ஒரு போதையுண்டு. பணம் பொருள்,புகழ் போன்றவையும் ஒரு வகையான போதையே அதனால் குடிபோதை பெரிய தவறல்ல என்பது அவரது கருத்து.
MGR அவர்கள் கடவுள் நம்பிக்கை கொண்டவர்.1963ல் அவர் திமுக வில் தீவிரமாக பணியாற்றி கொண்டிருந்தார்.திமுக என்பது கடவுள் நம்பிக்கையில்லாத கடவுளுக்கு எதிரான ஒரு கட்சியாக வடிவெடுத்திருந்த சமயம் அது.அப்போது MGR ன் வளர்ச்சியை பிடிக்காதவர்கள் அவர் கட்சியின் கொள்கையை மீறுகிறார் என்று குற்றம் சாட்டி அவரை கட்சியின் தலைமையில் சொல்லி கட்சியை விட்டு அகற்ற பார்த்தனர். அந்த இக்கட்டான சூழ்நிலையில் மற்றவர்களுக்கு பாடம் புகுத்துவது போன்ற ஒரு பாடல் எழுதுமாறு கண்ணதாசனிடம் கேட்டார்.சூழ்நிலைக்கு பாட்டு எழுதுவது என்பது நம் கவிஞருக்கு கைவந்த கலை.அப்படி அவர் எழுதிய பாடல்தான் "என்னதான் நடக்கும் நடக்கட்டுமே" என்று தொடங்கும் பாடல்.
இயக்குனர் : சங்கர்
இசை: விஸ்வநாதன் ,ராமமூர்த்தி
படம் : பணத்தோட்டம் (1963)
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிப்படும் மயங்காதே
ஒரு தலைவனிருக்கிறான் மயங்காதே
பின்னாலே தெரிவது அரிச்சுவடு
முன்னாலே இருப்பது அவன்வீடு
நடுவினிலே நீ விளையாடு
நல்லதை நினைத்தே போராடு
உலகத்தில் திருடர்கள் சரிபாதி
ஊமைகள் குருடர்கள் அதில்பாதி
கழகத்தில் பிறப்பதுதான் மீதி
மனம் கலங்காதே மதிமயங்காதே
இருட்டில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிப்படும் மயங்காதே
ஒரு தலைவனிருக்கிறான் மயங்காதே
பின்னாலே தெரிவது அரிச்சுவடு
முன்னாலே இருப்பது அவன்வீடு
நடுவினிலே நீ விளையாடு
நல்லதை நினைத்தே போராடு
உலகத்தில் திருடர்கள் சரிபாதி
ஊமைகள் குருடர்கள் அதில்பாதி
கழகத்தில் பிறப்பதுதான் மீதி
மனம் கலங்காதே மதிமயங்காதே
0 comments:
Post a Comment