விருந்தோம்பல் (குடும்ப விளக்கு)

நம் தமிழரின் வீரம்,கொடை,மானம் போன்ற முக்கியமான பண்புகளை போலவே மறைக்கப்பட்ட/மறுக்கப்பட்ட முக்கிய பண்பு விருந்தோம்பல்.Pizza மற்றும் buffet கலாச்சாரத்திற்கு மாறி விட்ட நம்மால் இதை பெரியதாக உணர முடியாது.நாம் தொலைத்து விட்ட அடையாளங்களில் ஓன்று விருந்தோம்பல்.

நம் கலாச்சாரத்தை,தமிழரின் வாழ்க்கையை விளக்கும் நூல்/பதிவு
குடும்ப விளக்கு.விருந்தினரை எப்படி உபசரிக்க வேண்டும் என்று பாரதிதாசன் விளக்குகிறார்.

இதை நான் விருந்தோம்பலின் இலக்கணமாகப் பார்க்கிறேன்.

Bharathidasan,kudumba vilakku


வாழை இலையின்அடி உண்பார் வலப்புறத்தில்
வீழ விரித்திக் கறிவகைகள் - சூழவைத்துத்

தண்ணீர்வெந் நீரைத் தனித்தனியே செம்பிலிட்டு
வெண்சோ றிடுமுன் மிகஇனிக்கும் - பண்ணியமும்

முக்கனியும் தேனில் நறுநெய்யில் முழ்குவித்தே
ஒக்கநின்றே உண்டபின்பால் சோறிட்டுத்-தக்கபடி

கேட்டும் குறிபறிந்தும் கெஞ்சியும் மிஞ்சுமன்பால்
ஊட்டுதல்வேண் டும்தாய்போல் ஒண்டொடியே!-கேட்டுப்போ; 

     இந்த வரிகளில் எப்படி இலையை இடவேண்டும்,எப்படி பரிமாற வேண்டும் என்று விவரிக்கிறார்.தண்ணீரையும் வெண்ணீரையும் தனித்தனியே வைத்து சாப்பாடு இடுமுன் மிக இனிப்பான இனிப்பு வகைகளை இலையிலிட்டு முக்கனியை தேனிலும்,நறுநெயிலும் மூழ்கி வைக்கவேண்டும்.

   விருந்தினருக்கு உணவுபொருட்களை மறுபடியும் கேட்பதற்கு கூச்சமாக இருக்கும் அதற்காக விருந்து அளிக்கும்போது உணவிட்டு அங்கேயே நின்று உணவிடவேண்டும். விருந்தோம்பலில் முக்கியமான பண்பு குறிப்பறிந்து உணவுபறிமாறுதல்.

   கெஞ்சியும் மிஞ்சியும் என்ற வார்த்தையை பாரதிதாசன் கையாளுகிறார் அதாவதுஅவர்களை கெஞ்சியும் அவர்களை செல்லமாக மிரட்டியும் அவர்களுக்கு பிடித்தவற்றை பரிமாற வேண்டும்.


எக்கறியில் நாட்டம் இவர்க்கென்று நீயுணர்ந்தே
அக்கறியை மேன்மேலும் அள்ளிவை -விக்குவதை

நீமுன் நினைத்து நினைப்பூட்டு நீர்அருந்த!
ஈமுன்கால் சோற்றிலையில் இட்டாலும் - தீமையம்மா

பாய்ச்சும் பசும்பயற்றுப் பாகுக்கும் நைய்யளித்துக்
காய்ச்சும் கடிமிளகு நீருக்கும் -வாய்ப்பாகத்

தூய சருகிலுறு தொன்னைபல வைத்திடுவாய்
ஆயுணவு திர்ந்தே அவரஎழுமுன் - தாயே

அவர்கைக்கு நீர்ஏந்தி நெய்ப்பசை யகற்ற
உவர்கட்டி தன்னை உதவு - துவைத்ததுகில்
 
ஈரம் துடைக்கஎன ஈந்து,மலர்ச் சந்தனமும்
ஓரிடத்தே நல்கியே ஒள்இலைகாய் சேரவைத்து
மேல்விசிறி வீசுவிப்பாய் மெல்லியலே!" 

உண்டாபின் அவர் கைக்கு நீர் எடுத்து கொடுக்க வேண்டும்.கையில் உள்ள நெய்பசை அகற்ற சோப்பு எடுத்து தர வேண்டும்.ஈரத்தை துடைக்க துவைத்த துணியை கொடுக்க வேண்டும்.வெற்றிலையும் பாக்கும் ஒன்றாக வைத்து விசிறி விசிற  வேண்டும்.இவையாவும் விருந்தோம்பலின் இலக்கணாமாகப் பாரதிதாசன் குறிப்பிடுகிறார்.இதை கடைபிடிக்க நாம் முயற்சிப்போம்.

0 comments:

Post a Comment

 
  • தமிழ் ஆவணம்