கண்ணதாசனும் காமராஜரும் - பாகம் 2


சென்ற பதிவில் காமராஜருடன் கொண்ட நட்பையும் அவருக்காக அவர் எழுதிய பாடலையும் பார்த்தோம்.காமராஜர் மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதே கண்ணதாசன் விரும்பினார்.

பட்டிக்காட பட்டணமா  என்ற படத்தில் ஒரு பக்தி பாடல்

அம்பிகையே ஈஸ்வரியே எனை
ஆழவந்த கோவில் கொண்ட முத்துமாரி என்ற பாடலில்
காமராஜர் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை அழகாக பக்திப் பாடலில் வெளிபடுத்தியிருப்பார். 


 படம் : பட்டிக்காட பட்டணமா 
 சூழ்நிலை : பக்திப் பாடல்


Kannadasan Songs


அம்பிகையே ஈஸ்வரியே எனை
 ஆழவந்த கோவில் கொண்ட முத்துமாரி
 சிவகாமியின் உமையவளே முத்துமாரி
 உன் செல்வனுக்கும் காலமுண்டு முத்துமாரி

 மகராஜன் வாழ்கவென்று வாழ்த்துகூறி
 இந்த மக்களெல்லாம் போற்ற வேண்டும் கோட்டையேறி
 ஏழைகளை எச்சதில்லை முத்துமாரி
 நாங்க ஏமாத்தி பொழச்சதில்லை முத்துமாரி

 வாயை வைத்து வாழுகிறோம் முத்துமாரி
 இனி வருங்காலம் எங்களுக்கு முத்துமாரி.

இந்த பாடலில் சிவகாமியின் உமையவளே என்பது காமராஜரின் தாயை குறிக்கின்றது.இதில் கோட்டை என்ற சொல் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற தன் விருப்பத்தை சொல்வதாகும்.


படிக்காத மேதை படத்தில் இன்னொரு பாடலில் படிக்கவில்லை என்றாலும் ஒருவரால் சிறந்து விளங்க முடியும் என்பது போல் வரும் அந்த பாடல் காமராஜரை நினைத்து எழுதிய பாடலாகும்.


Kannadasan Songs


படிப்பினால் அறிவுபெற்றோர் ஆயிரமுண்டு
பாடம் படிக்காத மேதைகளும் பாரினிலுன்டு
கொடுப்பதற்கும் பிரிபதற்கும் படிப்புவேண்டுமா - என்றும்
குழந்தைபோல் வாழ்ந்துவிட்டல் துன்பம்தோன்றுமா

இவ்வாறு காமராஜரிடம் நட்பு கொண்ட கண்ணதாசன் அவர் இறப்புக்கு பின் மனதால் வருந்தி எழுதிய கவிதை

சொத்து சுகம் நாடார் ,
சொந்தந்தனை நாடார்
பொன்னென்றும் நாடார்,
பொருள் நாடார்
தான்பிறந்த அன்னையும் நாடார்,
ஆசைதனை நாடார்,
நாடென்றே நாடித் - தன்
நலமொன்றும் நாடாத
நாடாரை நாடென்றார்.


இவ்வாறு காமராஜரிடம் கொண்ட நட்பை தன் பாடலில் வெளிபடுத்தியவர் கண்ணதாசன்.


மீண்டும் இன்னொரு பதிவில் சந்திப்போம்.

0 comments:

Post a Comment

 
  • தமிழ் ஆவணம்