விஸ்வரூபம் படத்திற்கு தடை விதிப்பது சரியா என்பதை பற்றி எனது கருத்துக்களை இந்த பதிவில் காண்போம்.
முதலில் இந்த படம் இந்தியாவை பற்றியோ அல்லது தமிழ் நாட்டை பற்றிய படமில்லை.இது உலக தீவிரவாதத்தை பற்றியது குறிப்பாக ஆப்கானிஸ்தான் மற்றும் அமெரிக்காவை பற்றியது.
ஆனால் அமெரிக்காவில் எந்த வித எதிர்ப்பு இல்லாமல் வெற்றிகரமாக ஓடுகிறது.
இந்த படத்தில் தீவிரவாத தலைவன் தமிழ் பேசுகிறார்( மக்களுக்கு புரியவேண்டும் என்பதற்காக) அவரை தவிர அனைவரும் அரபிக் பேசுகிறார்கள். ஆப்கானிஸ்தானில் வாழும் தீவிரவாதிக்கு எப்படி தமிழ் தெரியும் என்ற கேள்வி எழக்கூடாது என்பதற்காக (லாஜிக் மீராக்கூடாது ) நான் தமிழ்நாட்டில் 1 ஆண்டு இருந்தேன் என்று டயலாக் வரும்.அதற்காக படத்தை எதிர்ப்பது என்பது மிகவும் வருத்தப்படக் கூடிய ஓன்று.இது ஒன்றும் புதிய காட்சியல்ல.1992 ல் வெளிவந்த ரோஜாவில் தீவிரவாத தலைவன் தமிழில் பேசுவான்.எப்படி தமிழ் தெரியும் என்று கேட்கும் போது நான் கோயம்புத்தூர் Agriculture collegeல் படித்தேன் என்று சொல்லுவான்.இந்த மாதிரி லாஜிக் மீறாமல் படம் எடுக்க வேண்டும் என்பவருக்குதான் இந்த மாதிரியான எதிர்ப்புகள் வரும்.
இந்த படத்தை எதிர்ப்பது நியாயம் என்றால் தமிழ் நாட்டில் கிட்டதட்ட 500 படங்களை கடந்த 10 ஆண்டுகளில் தடை செய்திருக்க வேண்டும் .எல்ல படங்களிலும் அரசியல்வாதி ஊழல் செய்வது போல், போலீஸ் லஞ்சம் வாங்குவது போல் காட்சிகள் இடம்பெறுகின்றன.எந்த அரசியல் வாதியும் லஞ்சம் வாங்கியதாக நீதிமன்றத்தில் நிருபிக்க படவில்லை அப்படியிருக்க எந்த ஆதாரத்தில் இந்த படங்கள் வெளிவந்தன ஏன் யாரும் இந்த படங்களை எதிர்க்கவில்லை?
இப்படி ஒவ்வொருவரும் எதிர்த்தல் எந்த படத்தையும் எடுக்க முடியாது.நூறு சதவித மக்களையும் சமாதான படுத்தி ஒரு செயல் செய்வது இயலாத காரியம். கூடாங்குலத்தையும், சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டையும் மக்கள் எதிர்த்தாலும் அரசு அதை கண்டு கொள்ளாமல் சட்டம் இயற்றி செயல்படுகிறது. 4 கோடி வியாபாரிகளின் எதிர்ப்பை மீறி அரசு செயல்பட்டு கொண்டுதான் இருக்கிறது.
எந்த ஒரு நிகழ்சியையோ அல்லது குறிப்பிட்ட காலத்தை பற்றி சொல்லும்போது அதை சார்ந்து நடந்த முக்கிய நிகழ்வுகளை கண்டிப்பாக குறிப்பிட்ட வேண்டும் என்பது கமலின் வாதம்.உதாரணமாக தசாவதாரத்தில் 17 நூற்றாண்டை குறிப்பிடும்போது சைவ வைணவ சண்டையை காட்டியுறுப்பார். ஹேராமில் சுதந்திர போராட்டத்தை குறிப்பிடும்போது கல்கத்தாவில் நடந்த இந்து முஸ்லிம் வன்முறையை காட்டியிறுப்பார் இப்படி நிறைய சொல்லி கொண்டே போகலாம்.
ஹிட்லரை பற்றி படம் எடுத்தால் அவருடைய கொடுமையை காட்டித்தான் ஆகவேண்டும்.இவர்கள் இப்பொது செய்திருக்கும் தடை எப்படி இருக்கு என்றால் நீ ஹிட்லரை பற்றி படம் எடுக்கலாம் ஆனால் அவனை ரொம்ப நல்லவன் என்று காட்ட வேண்டும் என்பதுபோல் உள்ளது.
இந்த படத்தில் அமெரிக்காவையும் கமல் சாடியிருப்பார்.இந்த வழக்கில் படத்தின் மேல் இடப்பட்ட தடை தவறு என்று நிரூபிக்க பட்டால் இந்த தடையால் ஏற்பட்ட இழப்பை ( பணத்தை) அரசாங்கம் கொடுக்குமா? உலக வரலாற்றில் ஒரு மொழியில் எடுக்கப்பட்ட படம் அந்த மொழி மக்கள் வசிக்கும் இடத்தில் தடை செய்யப்பட்டு வெளி நாடுகளில் ஓடுவது இதுவே முதல் முறை .

0 comments:
Post a Comment