கண்ணதாசனின் அரசியல் பிரவேசத்தில் அண்ணா ஒரு முக்கியமான நபர். அண்ணாவுடன் எவ்வளவு நெருக்கமாக இருந்தாரோ அவ்வளவு சண்டையும் போட்டுள்ளார்.திராவிட முன்னேற்ற கழகம் என்பது அண்ணாவிற்கு தாய் வீடு போன்றதாகும்.பலமுறை சண்டைபோட்டு பிரிந்துள்ளார்.1962 அண்ணாவிடம் சண்டையிட்டு கட்சியை விட்டு வெளிவந்த சமயம் "படித்தால் மட்டும் போதுமா" படத்தில் ஒரு பாடலில் அண்ணாவுடன் கொண்ட பிரிவையும் ஏமாற்றத்தையும் வெளிபடுத்துவார்.
அண்ணன் காட்டிய வழியம்மா - இது
அன்பால் விளைந்த பழியம்மா
கண்ணை இமையை கெடுத்ததம்மா
என் கையே என்னை அடித்ததம்மா
தொட்டால் சுடுவது நெருப்பாகும்
தொடாமல் சுடுவது சிரிப்பாகும்
தெரிந்து கெடுப்பது பகையாகும்
தெரியாமல் கெடுப்பது உறவாகும்
கொடுத்துதருள்வாய் என வேண்டிநின்றேன்
கும்பிட்ட கைகளை முறித்தெடுத்தாய்
அடைக்கலாமென்றே நினைத்திருந்தேன்
அனைத்தவனே நெஞ்சை எரித்துவிட்டான்
இந்தப் பாடலில் அண்ணா தனக்கு துரோகம் செய்து விட்டதுபோல் எழுதியிருப்பர். ஆனால்
இந்தப் பாடல் பாடலின் சூழ்நிலைக்கு மிகப் பொருத்தமாக இருக்கும்.
அதே ஆண்டு (1962) வெளிவந்த இன்னொரு திரைப்படம் "நெஞ்சில் ஓர் ஆலயம்" அதில்
ஒரு பாடலில் அண்ணா எங்கிருந்தாலும் வாழ வேண்டும் என்று எழுதியிருப்பார்.
அன்பால் விளைந்த பழியம்மா
கண்ணை இமையை கெடுத்ததம்மா
என் கையே என்னை அடித்ததம்மா
தொட்டால் சுடுவது நெருப்பாகும்
தொடாமல் சுடுவது சிரிப்பாகும்
தெரிந்து கெடுப்பது பகையாகும்
தெரியாமல் கெடுப்பது உறவாகும்
கொடுத்துதருள்வாய் என வேண்டிநின்றேன்
கும்பிட்ட கைகளை முறித்தெடுத்தாய்
அடைக்கலாமென்றே நினைத்திருந்தேன்
அனைத்தவனே நெஞ்சை எரித்துவிட்டான்
எங்கிருந்தாலும் வாழ்க உன் இதயம்
அமைதியில் வாழ்க
இன்னொரு சமயம் அண்ணா உடல்நிலை சரியில்லாமல் மருத்துவ மனையில்
அனுமதிக்க பட்டிருந்த சமயம் "தில்லானா மோகனாம்பாள்" படத்தில் சிவாஜியின் உடல்
நலத்தை பத்மினி விசாரிப்பது போன்ற பாடல்.அண்ணாவை மனதில் வைத்து அவரின் உடல் நலத்தே விசாரிப்பது போன்று எழுதப்பட்ட பாடல் இந்தப்பாடல்அமைதியில் வாழ்க
நலந்தானா நலந்தானா
உடலும் உள்ளமும் நலந்தானா..
நலம் பெற வேண்டும் நீ என்றே
நாளும் ஏன் நெஞ்சில் நினைவுன்டு
இலை மறை காய்போல் பொருள்கொண்டு
எவரும் அறியாமல் சொல்கின்றேன்
கண் பட்டதோ உன் மேனியிலே
புண் பட்டத்தோ நானறியேன்
புண்பட்ட சேதியை கேட்டவுடன் - இந்த
பெண்பட்ட பாட்டை யார் அறிவார்.
மீண்டும் இன்னொரு பதிவில் அண்ணாவுடன் கொண்ட நட்பை காணலாம்.