தசாவதாரம் சொல்லும் வரலாற்று உண்மை



தசாவதாரத்தின் முதல் அவதாரம் (நம்பி) கற்பனை கதையல்ல. அது ஒரு வரலாற்று கொடூரத்தின் பதிவாகும். பல்லவர் காலத்தில் எழுந்த சைவம், சோழர் காலத்தில் பெரிய மதமாக நிலைப்பெற்றது. 

சோழப் பேரரசு காலத்தில் 500 மேற்பட்ட சிவன் கோயில்கள் கற்கோயிலாக மாற்றப்பட்டன. இதற்கு தஞ்சை பெரிய கோவிலும் ,கங்கை கொண்ட சோழபுரமும் மிகச்சிறந்த உதாரணம். 

சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிவனும் ,கோவிந்தராஜன் சிலையும் வழிபட்டு வந்தனர். ஆனால் சைவ ஆகம விதிப்படி, சிவன் கோயிலில் லிங்கம் மட்டுமே வழிபட வேண்டும். வேறு எந்த தெய்வமும் இருக்கக்கூடாது. இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில்(1133 - 1150) தில்லையில் உள்ள கோவிந்தராஜன் சிலையை அகற்றி அதை கடலில் கரைத்ததாகவும் அது பின்நாளில் மேலே வந்ததாகவும் சொல்வார்கள்.

குலோத்துங்கன் காலத்தில் மக்களை மிக தீவிரமாக சைவத்திற்கு மாற்றினார்கள். அவன் காலத்தில்தான் நாயன் மார்களைப் பற்றி பெரியபுராணம் ( இயற்றியவர் சேக்கிழார் ) பாடப்பெற்றது.

வெறித்தனமான மத மாற்றத்திற்கு உதாரணமாக சைவத்தை பின்பற்ற மறுத்து, ராமானுஜரின் இடத்தை கூற மறுத்த கூரத்தாழ்வார் கண்கள் பிடுங்கப்பட்டன.வைணவ பெரியவரான ராமானுஜரை கொள்ள முயற்சிகள் நடைப்பெற்றன. வைதீகமும் வேதமும் கோயில்களை ஆட்டிப்படைத்தன. இந்த வரலாற்று கொடுமையின் மிகச்சிறந்த பதிப்புதான் அந்த முதல் அவதாரம்.

செவ்வி : விக்கி, இணையம், அறிவுக்கரசு

0 comments:

Post a Comment

 
  • தமிழ் ஆவணம்