ராமர் பாலத்தை வைத்து மிகப்பெரிய அரசியல் தமிழ்நாட்டிலும், தேசிய அரசியலிலும் நடைபெற்று வருகிறது. ராமர் பாலத்தை இடிக்க கூடாது, அது இந்துகளின் மனதே புண் படுத்துகிறது என்று ஒரு சாரரும், தூத்துக்குடிக்கு கிடைக்க வேண்டிய வருவாய் எல்லாம் இலங்கைக்கு செல்கிறது, எனவே சேது சமுத்திர திட்டத்தை உடனே அமுல் படுத்த வேண்டும், ராமர் பாலம் கற்பனையே அது வெறும் சுண்ணாம்பு படிவு என வாதிடுவோரும் உண்டு. இதிலுள்ள அரசியலை தவிர்த்து பகுத்தறிவு வழியில் இதற்கான விடையை அறிவோம்.
17 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் ராமர் வாழ்ந்ததாக கூறப்படுகிறது.அப்போது மனிதனே இருந்திருக்க முடியாது. இலங்கையும் இந்தியாவுடன் இணைந்து குமரிக்கண்டமாக இருந்தது. அப்போது இந்தியாவிற்கும், இலங்கைக்கும் கடலே இல்லை. இதை பின் வரும் சான்றுகளுடன் நிறுவலாம்.
குமரியாறு தமிழகத்தின் தென்எல்லையாக இருந்தபோது தொல்காப்பியம் இயற்றப்பட்டது ( சுமார் 2400 ஆண்டுக்கு முன் ) பணம்பாரனார் எழுதிய தொல்காப்பிய சிறப்பு பாயிரத்தில் தமிழ் எல்லைகள் கூறப்பட்டுள்ளன.
"வடவேங்கடந் தென்குமரி
ஆயிடைத்
தமிழ்கூறு நல்லுலகத்து"
அவர் காலத்தில் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையே கடல் இல்லை.(இதில் மேற்கும் கிழக்கும் கடல் இருந்ததால் எல்லைகள் குறிப்பிடப்படவில்லை).
பின்னர் வாழ்ந்த சிறுகாக்கை பாடினியார் காலத்தில் குமரியாற்றுக்கும் இன்றுள்ள குமரி முனைக்கும் இடைப்பட்ட நிலப்பகுதி அழிந்து கடலே தென் எல்லையாக அமைந்ததே பின் வரும் பாடல் மூலம் அறியலாம்.
"வடதிசை மருங்கின் வடுகு வரம்பாகத்
தென்றிசை யுள்ளிட் டெஞ்சிய மூன்றும்
வரைமருள் புணரியொடு கரைபொருது கிடந்த
நாட்டியல் வழக்கம்"
இதையே சிலப்பதிகாரம் வழிமொழிகிறது. சுமார் தொல்காப்பிய காலத்திற்கும், இரண்டாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் குமரிக்கண்டம் நீரில் அழிந்து இலங்கை உருவான காலம் என்பது புலனாகிறது.
நாம் ராமர் பாலம் என்று சொல்லுவது வெறும் பாசி படிவ திட்டே ( Great Barrier Reef ) இது கடலில் 2300 KM பரவி உள்ளது என அறிவுக்கரசு நிறுவுகிறார்.
மொத்தம் 51 வகையான ராமாயணங்கள் உள்ளன அவற்றை தொகுத்து A.A மணவாளன் புத்தகம் எழுதியுள்ளார். சமகாலத்தில் எழுதப்பெறாத யாவும் கற்பனை கலந்த வெறும் கதையே என்பதற்கு ராமர் பாலம் மிகப்பெரிய சான்று.
செவ்வி : கால ஆராய்ச்சி ராசமாணிக்கனார் ,சுப.வீ கருத்தரங்கம்
0 comments:
Post a Comment