சரசுவதி சமண தெய்வமா ?

0 comments

ஒரு அரசோ, மதமோ கட்டமைக்கப்படும்போது அதை சுற்றி / எதிர்க்கும் யாவும் அதனுள் கரைக்கப்படும் என்பது வரலாற்று நியதி. அப்படித்தான் நம் நாட்டில் பல தெய்வங்கள் இறந்திருக்கின்றன சில தெய்வங்கள் வேறு பெயரில் புதிதாக பிறந்தன. திராவிட தெய்வமான மூதேவி மதிப்பிழந்து இரண்டு நூற்றண்டுக்குப்பின் சரஸ்வதி என்ற "வைதீக பெண் தெய்வம்" கோவிலுக்குள் நுழைக்கப்படுகிறது.  தோற்றத்தில் வெள்ளை சேலை உடுத்திய சரசுவதி சமண...

தசாவதாரம் சொல்லும் வரலாற்று உண்மை

0 comments

தசாவதாரத்தின் முதல் அவதாரம் (நம்பி) கற்பனை கதையல்ல. அது ஒரு வரலாற்று கொடூரத்தின் பதிவாகும். பல்லவர் காலத்தில் எழுந்த சைவம், சோழர் காலத்தில் பெரிய மதமாக நிலைப்பெற்றது.  சோழப் பேரரசு காலத்தில் 500 மேற்பட்ட சிவன் கோயில்கள் கற்கோயிலாக மாற்றப்பட்டன. இதற்கு தஞ்சை பெரிய கோவிலும் ,கங்கை கொண்ட சோழபுரமும் மிகச்சிறந்த உதாரணம்.  சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிவனும் ,கோவிந்தராஜன் சிலையும்...

ராமர் பாலம் கற்பனையா?

0 comments

    ராமர் பாலத்தை வைத்து மிகப்பெரிய அரசியல் தமிழ்நாட்டிலும், தேசிய அரசியலிலும் நடைபெற்று வருகிறது. ராமர் பாலத்தை இடிக்க கூடாது, அது இந்துகளின் மனதே புண் படுத்துகிறது என்று ஒரு சாரரும், தூத்துக்குடிக்கு கிடைக்க வேண்டிய வருவாய் எல்லாம் இலங்கைக்கு செல்கிறது, எனவே சேது சமுத்திர திட்டத்தை உடனே அமுல் படுத்த வேண்டும், ராமர் பாலம் கற்பனையே அது வெறும் சுண்ணாம்பு படிவு என வாதிடுவோரும் உண்டு. இதிலுள்ள...

வரலாற்றை உற்று நோக்குவோம் : மூதேவி

0 comments

யாரையாவது வசைபாட மூதேவி என்ற சொல் அதிகமாக பயன்படும். என் பாட்டி மாலையில் விளக்கு போடு, இல்லையென்றால் மூதேவி வந்துவிடுவாள் என்பார்கள். அழுக்காக , நாற்றம் வீசுகிற , சோம்பலாக இருப்பவர்களிடம் மூதேவி வந்துவிடுவாள் என்னும் சொல்லாடல் உள்ளது. இது ஒரு வரலாற்று திரிபாகும். மூத்ததேவி என்ற சொற்பதம் மருவி மூதேவியாயிற்று. மூத்ததேவி திராவிட பெண் தெய்வம். சங்க காலத்திலிருந்த ஒரு பெண் தெய்வம்....

 
  • தமிழ் ஆவணம்