தென்னிந்திய சினிமாவின் தலைநகரம் - கோயம்புத்தூர்

கோயம்புத்தூர் என்றவுடன் நினைவுக்கு வருவது,தொழிற்சாலைகள், கொங்கு தமிழ், சிறந்த கல்லூரிகள், அடுமனைகள் என சொல்லிக்கொண்டே போகலாம்.
கோவை தொழிற்சாலைகள் நிறைந்த ஊர் என்பதே எல்லோருடைய மன பிம்பம் ஆனால் 1950 வரை எல்லா திரைபடங்களும் இங்குதான் எடுக்கப்பட்டது என்பதே உங்களால் நம்ப முடிகிறதா. தென்னிந்திய சினிமாவின் தலைநகரமாக சிம்ம சொப்பனமிட்டு இருந்த ஊர் கோவை.

சென்ற பதிவில் தென்னிந்திய சினிமா உருவானதை பற்றி எழுதியிருந்தேன்.
இந்த பதிவில் கோவை எப்படி சினிமா துறைக்கு பங்காற்றியது என்பதை பார்ப்போம்.


திரைப்படங்களின் தலைநகரம்:

சாமிக்கண்ணு வின்சென்ட் 1914 முதல் திரையரங்கை "Variety Hall Cinema" என்ற பெயரில் Town Hall ல் அமைத்தார். இப்பொது Delite Theatre என்ற பெயரில் இயங்கி கொண்டிருக்கிறது. பின்னர் ர.கே ராமகிருஷ்ணன்,C.N. வேங்கடபதி நாய்டு,S.பீமா செட்டி,S.M.ஸ்ரீராமுலு மற்றும் P.A.ராசு இணைத்து Central Studio's அமைத்தனர். ஸ்ரீராமுலு நாயுடு Pakshiraja Studio யை நிறுவினார். அது தென்னிந்திய சினிமாவின் மகுடமாக விளங்கியது (தற்போது அது கல்யாண மண்டபமாக இயங்குகிறது ). Pakshiraja Studio ல் இருந்து தயாரிக்கப்பட்ட "மலைக் கள்ளன்" மிகப் பெரிய வெற்றி பெற்றது. இது அந்த காலத்தில் 6 மொழியில் எடுக்கப்பட்டது. Coimbatore Talkies , Parameswaran Talkies ,Pakshiraja Studio மற்றும் Central Studios போன்றவை பல வெற்றி படங்களை தயாரித்தன. இந்த Studio கள் யாவும் கோயம்புத்தூரில் நிறுவப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. அந்தக்காலத்தில் தென்னிந்தியாவில் வேறு எங்கும் திரையரங்களும், ஸ்டுடியோகளும் இல்லை என்பதே உண்மை.


திலிப் குமார் ,மீனா குமாரி நடித்த Azaad திரைப்படம் Central Studioல் எடுக்கப் பட்டது.இந்தப் படம் வெள்ளி விழா கொண்டாடிய படமாகும்.Central Studio ல் தங்கும் அறைகள் இருந்தன.அங்கு சினிமா கலைஞர்கள் தங்கிதான் பல படங்களை எடுத்துள்ளனர்.

ஸ்ரீராமுலு ஜகதலப்ரதாபன்,கன்னிகா,மலைக் கள்ளன் போன்ற பல வெற்றி படங்களை கோவையில் தயாரித்தார்.

Ashok Pictures மற்றும் Jupiter production கம்பெனி பல படங்களை இங்கு தயாரித்தனர்.


ராசு செட்டியார் 1937 முருகன் தியேட்டரையும் 1938 ராஜா தியேட்டரையும் நிறுவி Chandra Prabha Pictures என்ற பெயரில் பல படங்களை தயாரித்து வெளியிட்டார். P.A.R விஸ்வநாதன் "Coimbatore Film Distribution Association" கோபலபுரத்தில் நிறுவினார். முதன் முதலில் நகை விளம்பரங்களுக்கு அப்போதைய கதாநாயிகளான அஞ்சலிதேவி மற்றும் வரலட்சுமி யை நடிக்க வைத்தனர். இந்தியாவின் சிறந்த கேமிராக்கள் Projectors பயன்படுத்தப்பட்டன.
N.H Road ல் இருந்த கடைகள் திரைப்படங்களுக்கு தேவையான எல்லா பொருட்களும் கிடைத்தன. குறிப்பாக Projectors  அதிகமாக விற்பனை செய்யப்பட்டன.


திரைப்படங்களின்  விநியோகம் பெரிய தொழிலாக கோயம்புத்தூரில் இருந்தது. பல நூறு திரைப்பட ஆபீஸ் கோபாலபுரம் ரோட்டில் அமைந்திருந்தது.
ஸ்ரீனிவாச தியேட்டர் ( Broke Bond road ) ,ரெயின்போ  தியேட்டர் ஆங்கில படங்களை திரையிட்டன.ஸ்ரீபதி தியேட்டரில் European படங்கள் சப் டைட்டிலுடன் திரையிடப்பட்டன.

சினிமா பிரமுகர்கள் தொடக்க வாழ்க்கை :

இந்திய சினிமாவின் ஜாம்பவான்கள் என்று சொல்லப்படும் பலரின் வாழ்க்கை தொடங்கியது கோயம்புத்தூரில்தான். 1936 ல் சதிலீலாவதி படத்தில் கதாநாயகனாக தனது (19 வயதில்) அறிமுகமானார் M.G.R ( மருதூர் கோபால ராமச்சந்திரன் ). மருதாசலம் செட்டியார் அந்த படத்தை தயாரித்தார். அந்த படத்திற்காக ரூபாய் 100 யை சம்பளமாக பெற்றார் M.G.R.
1936 ல் ஸ்ரீராமுலு நாய்டு தயாரித்த மலைக் கள்ளன் படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. M.G.R ன்  மற்றொரு வெற்றிப் படமான நாடோடி மன்னன் படத்திற்கு 10 kg வெள்ளி வாழும் ,கேடயங்களை பரிசாக அளிக்கப்பட்டது.அந்த பரிசுடன் N.H ரோட்டு முதல் ராஜா தியேட்டர் வரை ஊர்வலமாக வந்தார் M.G.R அவர்கள்(M.G.R தயாரித்த முதல் திரைப்படம் நாடோடி மன்னன்).தென்னிந்தியாவின் முதல் சூப்பர் ஸ்டாரான M.K தியாகராஜா பாகவதரின், வேணுகானம்,சொக்கமேல மற்றும் அழிவின் பாடை போன்ற படங்கள் கோவையில் எடுக்கப்பட்டன. சிவாஜி நடித்த மரகதம் படமும்கோவையில் எடுக்கப்பட்டன. கருணாநீதி மற்றும் N.T.R போன்ற அரசியல் தலைவர்களும் தனது திரையுலக வாழ்க்கை இங்கிருந்துதான் தொடங்கினார்.N.S  கிருஷ்ணன் ,T .M சௌந்தரராஜன்,M.K ராதா, T.S பாலைய்யா போன்ற திரையுலக மேதைகளும் தமது வாழ்க்கையை கோவையில் இருந்துதான் தொடங்கினார்கள்.

தேவர் பிலிம்ஸ் கூட கோவையிலிருந்து தொடங்கப்பட்டத்தாகும். கோவையை சேர்ந்த ஜெயசங்கர்,R.சுந்தர்ராஜன்,மணிவண்ணன், சிவக்குமார், பாக்கியராஜ், சத்தியராஜ் ,கிருஷ்ணன் பஞ்சு ,ரகுவரன் போன்றவர்கள் சினிமா துறையில் மிகப் பெரிய பங்காற்றியவர்கள். சினிமாவை வளர்த்த கோவைப் பற்றி உங்களுடன் பகிர்ந்ததில் மிக்க மகிழ்ச்சி.


தொடரும்...
நன்றி : Book:Coimbatore and the World of Cinema , Hindu

1 comments:

  1. இன்னும் நிறைய ஊர்களைப் பற்றிய செய்திகளையும் எழுதுங்கள்...!

    ReplyDelete

 
  • தமிழ் ஆவணம்