தீவிரவாதத்தை ஆதரிக்கிறாரா கமல் ?

1 comments


தலைப்பை பார்த்தவுடனே ஏதோ சர்ச்சை உண்டாக்கும் பதிவு என்று யோசிக்க வேண்டாம்.கமல்ஹாசன் எப்போதுமே அவரின் படங்களில் மாறுபட்ட சிந்தனையை சொல்லக்கூடியவர்.அவர் எப்போதும் பக்கவாட்டு சிந்தனை கொண்டவர்.மற்றவர்களை போல் நேர்கோட்டு சிந்தனையுடையவர் அல்ல.அதற்கு அவருடைய படங்களே சாட்சி. உதாரணமாக ஹேராம், யாரும் பேசக்கூட தயங்ககூடிய விஷயத்தை படமாக எடுத்துக்காட்டியவர்.அந்த வரிசையில் இன்னும் சில தினங்களில் வெளிவர காத்திருக்கும் படம்தான் விஸ்வரூபம்.


இது தீவிரவாதத்தை பற்றிய படம் என்பது எல்லோருக்கும் தெரியும்.சில மதாங்களுக்கு முன்னால் நடந்த விஜய் அவார்ட்ஸ் விழாவில் இந்த படத்தை பற்றி ஒரு வரியில் சொல்லுங்களேன் என்றதற்கு நான் சொல்லாவிட்டாலும் பாடல் வெளிவந்தவுடன் வைரமுத்துவின் வரிகள் கதையை சொல்லிவிடும் என்றார். பாடல்களும் வெளியாகிவிட்டது.அதில் இரண்டு பாடல்கள் கதையை ஓரளவு சொல்லாமல் சொல்கின்றன. அந்த பாடல்களை பாடியவர் கமலஹாசன். இன்று மக்கள் பொதுவாக நேர்கோட்டு சிந்தனையுடையவராக இருக்கிறார்கள்.ஊடகங்களின் கண்கள் வழியாகத்தான் இந்த உலகத்தை பார்கிறார்கள். அது ஒரு அரசியல் நிகழ்சியாக இருந்தாலும் சரி, இல்லை சினிமாவாக இருந்தாலும் சரி இதே நிலைதான்.




Vishwaroopam



இதோ அந்த பாடல் வரிகள்



துப்பாக்கி எங்கள் தோளிலே
துர்பாகியம் தான் வாழ்விலே
எப்போதும் சாவு நேரிலே
இப்போது வெல்வோம் போரிலே

போர்களை நாங்கள் தேர்ந்தேடுகவில்லை
போர்தான் எம்மை தேர்தெடுத்து கொண்டது
எங்களின் கையில் ஆயுதங்கள் இல்லை

ஆயுதத்தின் கையில் எங்கள் உடல் உள்ளது
ஊரை காக்கும் போருக்கு ஒத்திகை செய்கின்றோம்
சாவே எங்கள் வாழ்வென்று சத்தியம் செய்கின்றோம்

ஒட்டகமுதுகின் மேல் ஒரு சமவெளி கிடையாது
டாலர் உலகத்தில் சமதர்மம் கிடையாது
நீதி காணாமல் போர்கள் ஓயாது

துப்பாக்கி எங்கள் தோழனே
தோல்கொண்ட வீரன் தெய்வமே
எப்போதும் எங்கள் கோப்பையே
தண்ணீரு பருகும் மரணமே

பூமியை தாங்க புஜவீரன் கேட்கின்றோம்
புயலை சுவாசிக்க நுரையீரல் கேட்கின்றோம்
எக்கு திசைகளால் ஒர் இதயம் கேட்கின்றோம்
இருனூரண்டு இளமை கேட்கின்றோம்
துப்பாக்கி எம் தலையனையாய் தூங்கி திரிகின்றோம்
தோளோடு எம் மரணத்தை தூக்கி திரிகின்றோம்


இந்த பாடலை கேட்டாலே அது உங்களுக்கு புரிந்து இருக்கும்.தீவிரவாதத்தில் இரண்டு வகை உண்டு. 
ன்று பாகிஸ்தான் போன்ற நாடுகள் மற்ற நாட்டின் வளர்ச்சியை சீர்குலைக்க பண்ணுகின்ற தீவிரவாதம் அது முற்றிலும் களைய பட வேண்டும்.அதில் மாற்று கருத்தில்லை.இன்னொரு வகை வல்லரசு நாடுகள் ஒரு நாட்டின் செல்வத்தையும் பெட்ரோலையும் சுரண்ட தீவிரவாத அடக்கு முறை என்று இராக்கிலும்,அப்கானிஸ்தானிலும் சென்று மக்களை கொன்று குவித்து பெட்ரோல் கிணறுகளை தன்வசப்படுத்தி மக்களை கொன்று குவித்து சர்வாதிகாரம் நடத்தி வருகின்றன.

அங்குள்ள மக்கள் நாட்டிற்காகவும் தற்பாதுகாப்புகாகவும் போராடுவது ஒருவகை தீவிரவாதம்.எப்படி விடுதலை புலிகளின் செயல்கள் நியாயமாக படுகிறதோ அதுபோல் அவர்களின் செயல்களும் நியாயமானதே.இங்குள்ள ஊடகங்கள் இவர்களை தியாகிகளாகவும் அவர்களை தீவிரவாதிகளாகவும் சித்தரிகின்றன. இந்த பிரச்சனையை வேறு கோணத்தில் அவர்களின் நியாத்தையும் சொல்லுகின்ற படமாக விஸ்வரூபம் இருக்கும் என்பது என் யூகம்.

http://tamilaavanam.blogspot.com

100 வார்த்தைகள் ஒரு பொருள் ( கடவுள் )

0 comments

   தமிழின் பெருமை என்ன என்று எனக்குள் ஒரு கேள்வி?

"கல்தோன்றி மண் தோன்ற காலத்தே தோன்றியதா?" உலகப்பொதுமறை திருக்குறளா ? கணக்கில் அடங்காத இலக்கிய நூல்களா ? என்னவாக இருக்கும். இதோ என் அறிவுக்கு எட்டிய வரையில் ஒரு ஆய்வுக்கட்டுரை.என்னை பொறுத்தவரை தமிழின் பெருமை தமிழ் மொழியின் வார்த்தைகள் ,அதன் ஆழம்,அதை இலக்கியத்தில் கையாண்ட முறை.

உதராணமாக இலை என்ற வார்த்தையை குறிப்பிட கொளுந்து,குருத்து,இலை, தளிர் ,துளிர்,சருகு என்று எட்டு வார்த்தைகள் உள்ளன.சூழ்நிலையும், காலத்திற்கேற்ப இந்த வார்த்தைகளை பயன்படுத்தலாம்.இதுவே ஆங்கிலத்தில் குறிப்பிட (Green Leaves,Yellow Leaves,Red Leaves) என்று ஒற்று சொற்களைத்தான் பயன்படுத்கிறார்கள்.அதற்கென்று தனியாக வார்த்தை இல்லை.எல்லோருக்கும் தெரிந்த உதாரணம் என்றால் அண்ணன் ,தம்பி என்ற வார்த்தைகளுக்கு ஆங்கிலத்தில் ஒரே வார்த்தைதான் ஒற்று சொற்களுடன் (younger brother,elder brother) பயன்படுத்துகிறோம்.

இவ்வாறு கடவுளை குறிப்பிட தமிழில் நூற்றுக்கு மேற்பட்ட வார்த்தைகள் இலக்கியத்தில் பயன்படுத்த பட்டிருக்கின்றன.இதென்னா ஆச்சரியம் சங்க இலக்கியத்தில் மட்டும்தான் இருக்கிறதா? இன்றும் நடைமுறையில் ஒவ்வொரு கடவுளுக்கும் நூற்றுக்கு மேற்பட்ட பெயர்கள் உள்ளனவே என்று நீங்கள் கேட்கலாம். அதெல்லாம் கேசட்டையும்,புத்தகத்தை நிரப்புவதற்கு வியாபாரிகள் பக்தி என்ற பெயரால் நடத்தும் நாடகங்கள். ஆங்கிலத்தில் உள்ள ஒற்று சொற்களை போன்றது.உதாரணமாக ஐய்யப்பனை குறிப்பிட்ட முருகன் தம்பி, பார்வதியின் மகன்,கணபதியின் தம்பி,சிவனின் மைந்தன் என்று உறவுகளை வைத்தே 50 பெயர்களை நிரப்பிவிடுகிறார்கள்.


God


இங்கே நான் குறிப்பிடுவது அது போன்ற வார்த்தைகள் அல்ல.உதராணமாக கடவுள் என்ற வார்த்தை எடுத்துக் கொள்வோம்.நான் குறிப்பிடும் இந்த நூறு வார்த்தைகளும் கடவுளை குறிப்பிடும் ஆனால் அந்த ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு தனித்தன்மை இருக்கும்.அந்த ஒவ்வொரு வார்த்தையும் நூறு அர்த்தங்களை கொடுக்கும்.

இதோ அந்த வார்த்தைகள்



1. ஆண்டவன் God, as ruler of heaven and earth. Lord: கடவுள்.
2. இறைவன் God, the all-abiding.
3 தெய்வம் God, deity; கடவுள்.
4. கடவுள் God, who transcends speech and mind; இறைவன்.
5. இறையவன் God; கடவுள்.
6. தேவன் King; அரசன்.
7. அசலன் One who is motionless; அசைவிலாதவன்.
8. அமுதர் God, as immortal; கடவுள்.
9. ஏகன் God, as one.
10. ஆதிபகவன் God, the first cause; கடவுள்.
11. ஏமன் God of Death.
12. அற்புதன் God, as a marvellous, wonderful being; கடவுள்.
13. அருட்சோதி God, the embodiment of effulgent grace; கடவுள்.
14. காமன் The Buddhistic god of evil.
15. கூற்று Yama, the god of death; யமன்.
16. சிவஞானம் Knowledge of God; பதியுணர்வு.
17. சிவம் Highest state of God in which He exists as Pure Intelligence.
18. சுயம்பு Self-existent being, anything considered to be uncreated.
19. செம்பொருள் God; முதற்பொருளான கடவுள்.
20. செம்மல் Great person, as king; பெருமையிற் சிறந்தோன்.
21. தத்துவன் God, as the ultimate Reality.
22. அந்திரன் God; தேவன்.
23. அம்மான் ammān God, as father; கடவுள். ஆழி.
24. அண்ணல் God, deity; கடவுள்.
25. அணுக்கன் One who is near; சமீபஸ்தன்.
26. அச்சயன் God, as the imperishable One; அழிவில்லாத கடவுள்.
27. அக்கரன் God, as the indestructible One; கடவுள்.
28. அரூபி God, without form; கடவுள்.
29. நாசன் Destroyer; அழிப்பவன்.
30. கூற்றன் Yama, the god of death; யமன்.
31. குயவன் God, the Invisible; மறைபொருளானவன்.
32. காமதேவன் Indian Cupid, the god of love; மன்மதன்.
33. கரும்பன் God of love who has a sugar-cane bow.
34. கருணாமூர்த்தி God as Grace personified; அருளுருவானவன்.
35. ஒருமை orumai : Knowledge of God.
36. கடற்கோ the god or lord of the sea; வருணன்.
37. அறவன் Sage, ascetic.
38. அறவாணன் God, the abode of virtue, or whose abode is virtue; கடவுள்.
39. அக்கி God of fire; அக்கினிதேவன். அக்கியுங் கரமிழந்து.
40. அகண்டன் God, as the Undivided One; கடவுள்.
41. அனகன் God, as the sinless one.
42. அனந்தன் God, as the endless One; கடவுள்.
43. அனாதி God, who has no beginning; கடவுள்.
44. எரி Agni, god of fire.
45. ஆக்கியோன் God as the maker, creator; படைத்தோன்.
46. அட்சயன் God, as exempt from decay; கடவுள்.
47. அண்டன் God, as Lord of the universe; கடவுள்.
48. அகண்டிதன் God, as an undivided whole; பின்னப்படாத கடவுள்.
49. அகாரணன் God, as uncaused; கடவுள்.
50 காமக்கடவுள் The particular manifestation of god which one chooses to worship, the god of one's choice; வழிபடுதெய்வம்.
51. ஐயோன் God, lit., a being of subtle essence; நுண்ணியன்.
52 அதிகாரம் atikāram :Aspect of God in which action is predominant, one of three avattai. 53. அதிகுணன் God, as transcending all attributes; கடவுள்.
54. அதிவாதம் Preliminary consecratory ceremony for invoking the presence of God in an image.
55. அருட்குடையோன் God, one whose umbrella is grace itself; கடவுள்.
56. அவினாசி God, the indestructible; கடவுள்.
57. அனாமயன் One not subject to disease, as God.
58. அனிலன் the god of wind; வாயுதேவன்.
59. ஆத்திகன் One who believes in the existence of God.
60. ஆரியன் foreigner
61. இயமன் the god of death.
62. ஈறிலான் God, He who has no end; கடவுள்.
63. உதாசனன் Agni, the god of fire.
64 .எண்குணம் The eight attributes of God.
65. கத்தன் God Agent, doer, maker, author; செய்பவன்.
66. கந்தர்ப்பன் Appellation for Maṉmataṉ, the god of love; மன்மதன்.
67. கந்தவகன் God of wind, who wafts odours; வாயுதேவன்.
68. கராளி One of the seven tongues of God Agni; அக்கினிபகவான்.
69. கருணாகரன் God as the storehouse of grace; கருணைக்கு இருப்பிடமான கடவுள்.
70. கருணாலயன் God, the storehouse of grace; அருளுக்கு நிலைக்கள மானவன்.
71. கருப்புவில் Sugar-cane bow of the God of love; மன்மத னது கரும்பு வில்.
72. கருப்பொருள் God, the efficient Cause, the originator of all things.
73. காமதகனன் Šiva, as one who burnt Kāma, god of love; சிவன்.
74. காரணவன் One who is the First Cause, God; மூலகாரணனான கடவுள்.
75. கிருத்தியம் Five- fold functions of God. See பஞ்சகிருத்தியம்.
76. கிருபாகரன் The fountain of mercy or grace, as God.
77. கிருபாசனம் God, as the seat of mercy and grace.
78 சகதீசன் God, as Lord of the Universe.
79. சகந்நாதன் God, as Lord of the Universe; [உலகிற்கு இறைவன்] கடவுள்.
80. சகலாத்தன் God worshipped by the Nirgrantha sect of Jainas.
81. சச்சையன் God, as Reality; உண்மைப்பொருளானவன்.
82. சந்தோகன் God, as One who can be realised only through Vēdas.
83. சரமோபாயம் Absolute surrender to God, as the final means of salvation;
84. சித்துரு God, as the embodiment of intelligence; [அறிவு வடி வானவன்] கடவுள்.
85. சிற்குணம் Attribute of intelligence, either of God or individual souls; ஞானமாகிய குணம். 86. சிற்குணன் God, as Pure Intelligence; கடவுள்.
87. சின்மயன் Individual soul or God, as pure intelligence; ஞானரூபியான ஆன்மா.
88. சுயஞ்சோதி God, as self-luminous.
89. சுருதியான் God, as revealed by the Vēdas.
90. சேடன் God; கடவுள். செங்குன்றூர் நின்ற சேடனதாள்.
91. சேர்த்தி . Occasion when the god and goddess of a temple are seated together.
92. சோதியன் God, as radiant; [ஒளிவடிவமானவன்] கடவுள்.
93. ஞானவாரி God, as the Ocean of Wisdom; [ஞானக்கடல்] கடவுள்.
94. தபனன் Agni, the God of Fire; அக்கினிதேவன்.
95. தயாபரன் God, as All-Merciful; [தயைமிக்கவன்] கடவுள்.
96. தருமன் God of Justice and Righteousness; அறக்கடவுள்.
97. தனபதி God of wealth; குபேரன்.
98. துரியன் Soul in the highest state; சுத்தான்மா.
99. தேபூசை Worship, reverent homage paid to god.
100. நமதன் Lord, God; ஆண்டவன்.


மீண்டும் இன்னொரு பதிவில் இது போன்ற வேறொரு வார்த்தையுடன் சந்திப்போம்.

பாடல் பிறந்த கதை

0 comments

இந்தப் பதிவில் கவிஞரின் வாழ்க்கையில் நடந்த இரண்டு சுகமான அனுபவங்களை பார்ப்போம். 1972 கவியரசர் தனது மகளின் திருமணத்திற்காக ஆயத்தமாகிக் கொண்டு இருந்த சமயம் இன்னும் திருமணத்திற்கு சில தினங்களே இருந்த நிலையில் தனக்கு பணம் தருவதாக சொன்ன நபர் பணம் தரவில்லை.தன் மகளின் திருமணம் என்னவாகும் என்று கண்கள் கலங்கி கடவுளை வேண்டினார்.

அந்த சமயம் தேவர் பிலிம்ஸின் தெய்வம் படத்துக்கு பாடல்களை எழுத அழைப்பு வந்தது.கவிஞர் தன் சொந்த பிரச்சனையை மறந்து பாடலை எழுத ஆரம்பித்தார்.கவிஞர் ஒரு கண்ணன் பக்தன் என்பது எல்லோருக்கும் தெரியும்.இந்தப்பாடல் முருகனைப்பற்றி எழுத வேண்டிய பாடல்.அவர் அந்த பாடலை தன் உதவியாளருக்கு சொல்லிக்கொண்டு இருந்தார் அவரும் அந்த வரிகளை பிரதி எடுத்துக்கொண்டு இருந்தார்.

அப்போது பக்கத்து அறையில் இருந்த தேவர் அந்த வரிகளை கவனித்தார்.கண்ணதாசனுடன் மிக நெருக்கமாக பழகியவருக்கு அவரின் மனநிலை அவர் பாடலில் வெளிபடுத்துவார் என்பது தெரியும்.



Kannadasan,Sivaji


மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம்காக்கும் வேலய்யா

என்ற பாடலில் "தேவரின் குலம்காக்கும் வேலய்யா" என்ற வரியை மிகவும் மகிழ்ந்து ரசித்து பாராட்டிய தேவர் அவரின் வரிகள் ஏதோ குறிப்பால் உணர்த்துகின்றன என்பதை அறிந்து அவரின் நிலையை அறிந்து 1 லட்சம் ரூபாயும் தனது கல்யாண மண்டபத்தில் திருமணத்தை நடத்திக்கொள்ள அனுமதியும் கொடுத்தார். அவர் செட்டியார் குலத்தை சேர்த்தவர்.செட்டியார் குலத்தில் முருகனை குலதெய்வமாக வழிபடுவார்கள்.தான் என்னதான் கண்ணனின் பக்தனாக இருந்தாலும் அவருடைய குலதெய்வமான முருகன்தான் இந்த சூழ்நிலையில் காப்பாற்றினார் என்று உளமாற மகிழ்ந்தார்.

இன்னொரு சமயம் பீம்சிங் இயக்கத்தில் நம் கவிஞர் பாவா மன்னிப்பு படத்திற்காக பாடல் எழுத அமர்த்திருந்தார். அவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.அவர் அந்த தொலைபேசி அழைப்பில் பேசி விட்டு அமர்ந்தார்.MSV அவர்கள் நம் கவிஞரின் முகத்தை பார்த்தவுடன் ஏதோ ஒன்று நடந்து இருக்கிறது என்பதை உணர்த்தார்.பாடலுக்கான சூழ்நிலையை இயக்குனர் சொல்லிக்கொண்டு இருந்தார். கவிஞரின் முகம் வாடி இருந்ததை உணர்ந்த MSV அவர்கர் என்ன கவிஞரே ஏதாவது பிரச்னையா என்று கேட்டார் அதற்கு நம் கவிஞர் சிரித்துக்கொண்டே ஒன்றும் இல்லை என்று பதில் அளித்தார். 

கதையையும் சூழ்நிலையும் கேட்டவுடன் பாடலை எழுதி முடித்து பணத்தை பெற்று கொண்டு அவசரமாக கிளம்பினர். MSV தன்னுடைய காரில் அவரை இறக்கிவிட்டு மறுபடியும் கேட்டார் என்ன ஏதாவது பிரச்சனையா என்று. அப்போது நடந்தவற்றையெல்லாம் MSV யிடம் சொன்னார் நம் கவிஞர்.அவருக்கு வந்த தொலைபேசி அழைப்பில் கடன் தொல்லையால் அவருடைய வீட்டை சப்தி செய்ய நோட்டீஸ் வந்திருப்பதாகவும் வீட்டு பொருட்களை எடுத்து கொண்டு போகுமாறு சொல்லிருகிறார்கள். இந்த சூழ்நிலையில் எப்படி ஒருவரால் சிந்திக்க முடியும் ஆனால் நம் கவினரோ வழக்கம் போல தன் நிலையை இந்த பாடலில் எழுதியிருப்பார்.





 படம் : பாவா மன்னிப்பு

சிலர் சிரிப்பார் சிலர் அழுவார்
நான் சிரித்துக்கொண்டே அழுகின்றேன்
சிலர் அழுவார் சிலர் சிரிப்பார்
நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்

காலம் ஒருநாள் மாறும்
நம் கவலைகள் யாவும் தீரும்
வருவதை எண்ணி சிரிக்கின்றேன்
வந்ததை எண்ணி அழுகின்றேன்

இந்த பாடல்வரிகளில் மிக சிறப்பானது "வந்ததை எண்ணி அழுகின்றேன்" என்பது அவருக்கு வந்த பிரச்னையும் "வருவதை எண்ணி சிரிக்கின்றேன்" என்பது இந்த பாடல் எழுதியதால் வரக்கூடிய பணத்தையும் நினைத்து எழுதிய வரிகள்.இந்த பாடலால் வந்த பணத்தை வைத்து அந்த வீட்டு பிரச்னையில் இருந்து வெளிவந்தார். இவ்வாறு ஒவ்வொரு பாடலிலும் தன் வாழ்க்கையை எழுதியவர் நம் கவிஞர். 

 மீண்டும் இன்னொரு பதிவில் சந்திப்போம்

கண்ணதாசனும் அரசியலும்

0 comments


இந்த பதிவில் கண்ணதாசன் அரசியல் அனுபவங்கள் அதை அவர் பாடலில் வெளிபடுத்தும் விதம் ஆகியவற்றை காண்போம். ஒரு சமயம் தேர்தலில் தோல்வியுற்றபோது தனது சோகத்தை ஒரு பாடலில் வெளிபடுத்தியிருப்பார்.

பலே பாண்டியா படத்தில் அந்த பாடல் வரும்


யாரை எங்கே வைப்பது என்று பேதம் பிரியலே
அண்டகாக்கைக்கும் குயில்களுக்கும் பேதம்பிரியலே
பேரெடுத்து உண்மையை சொல்லி பிழைக்கமுடியலே
இப்ப பீடிகளுக்கும் ஊதுபத்திக்கும் பேதம்புரியலே

நானிருக்கும் இடத்தினிலே அவன் இருக்கின்றான்
அவனிருக்கும் இடத்தினிலே நானிருக்கின்றேன் -நாளை
எங்கை யாரிருப்பார் அதுவும் தெரியலே
நல்லவனுக்கும் கெட்டவனுக்கும் பேதம் பிரியலே



தான் அரசியலில் தோல்வியுற்ற போது அதை தாங்கி கொள்ள முடியாமல் தன் ஆதங்கத்தை இந்த பாடலில் எழுதியிருப்பார்.தன் கோபத்தை இப்படி நாகரீகமாக வெளிக்காட்டுவது அவருடைய பண்பு.அவர் இறந்து 32 ஆண்டுகளுக்கு பிறகும் அவரின் பாடலின் வரிகளை இன்று பேசுகின்றோம் என்றால் அந்த அளவுக்கு காலத்தை வென்ற கவிஞர் அவர்.

இதே போல் 1962 ஆண்டு தற்காலிகமாக அரசியலை விட்டு விலகியிருக்கலாம் என்று கவிஞர் முடிவு செய்தார்.அப்போது தனக்கு ஏற்பட்ட அவமரியாதையும் தோல்வியையும் ஆலய மணி என்ற படத்தில் வரும் சட்டி சுட்டதடா பாடலில் எழுதியிருப்பர்.

 அந்த பாடலில் நான் ரசித்த வரிகள்


Kannadasan,Sivaji


சட்டி சுட்டதடா கை விட்டதடா
 புத்தி கெட்டதடா நெஞ்சை தொட்டதடா
 நாலு நடந்து முடிந்த பின்னால்
 நல்லது கெட்டது தெரிஞ்சதடா

 ஆரவார பேய்களெல்லாம் ஓடிவிட்டதடா
 ஆலய மணியோசை கூடிவிட்டதடா

இவ்வாறு தனக்கு ஏற்படும் அனுபவங்களை ஏதோ ஒரு டைரியில் எழுதி வைக்காமல் மக்கள் ரசிக்க திரை இசையில் எளிய தமிழில் எழுதுவது என்பது அவருடைய பாணி.இதனால் இந்த பாடல்கள் என்றும் உயிர் பெற்று நிற்கின்றன. சூழ்நிலையை உள்வாங்கி எழுதுவதை விட தனது அனுபவங்களை அந்த சூழ்நிலைக்கு ஏற்றவாறு எழுதுவது அவருடைய சிறப்பு.

 மீண்டும் இன்னொரு பதிவில் வேறு சில பாடல்களுடன் சந்திப்போம்.


 
  • தமிழ் ஆவணம்