ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு


இந்தப் தலைப்பை பார்த்தவுடன் நான் எதை பற்றி எழுதப் போகிறேன் என்று புரிந்திருக்கும். கண்ணதாசனின் வாழ்வில் மது எவ்வளவு பெரிய அங்கமாக இருந்தது என்பதே பற்றி பார்ப்போம். 1972 /73 ல் பிரபல நடிகரும் / தயாரிப்பாளருமான பாலாஜி அவர்கள் இந்தியில் வெளிவந்த துஷ்மன் படத்தை தமிழில் நீதி என்று ரீமேக் செய்தார்.அந்த படத்தில் ஒரு காட்சியில் ஹீரோ மதுபாட்டிலை கீழே போட்டு உடைத்து இனிமேல் குடிக்க மாட்டேன் என்று சத்தியம் செய்வது போன்ற ஒரு சூழ்நிலைக்கு பாடலை எழுதுமாறு கேட்டார்.

கவிஞரோ யோசித்துவிட்டு "நாளை முதல் குடிக்க மாட்டேன்" என்று தொடங்கும் பாடலை எழுதினார்.பாலாஜி பாடலை பார்த்து விட்டு ஹீரோ உடனே திருந்துவதாக இருக்க வேண்டும் நீங்கள் நாளை முதல் குடிக்க மாட்டேன் என்று எழுதியிருக்கீங்க என்றார்.அதற்கு கவிஞரோ நீயும் ஒரு குடிகாரன் நானும் ஒரு குடிகாரன். எந்த குடிகாரனவது இன்று முதல் குடிக்க மாட்டேன் என்று சொல்லுவானா? என்று கேட்டார் அதற்கு பாலாஜியும் ஒத்துக்கொண்டார். 

 இதோ அந்த பாடல் வரிகள்Kannadasan,Sivajiநாளை முதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம்
இன்னைக்கு ராத்திரிக்கு தூங்க வேண்டும் ஊத்திக்கிறேன் கொஞ்சம்

கடவுள் என் வாழ்வில் கடன்காரன்
கவலைகள் தீர்ந்தால் கடன்தீரும்
ஏழைகள் வாழ்வில் விளையாடும்
இறைவன் நீ கூட குடிகாரன்

போதை வந்தபோது புத்தியில்லையே
புத்தி வந்தபோது நண்பரில்லையே

இந்தப்பாடல் கடவுளை பற்றி சில தவறான வரிகள் இருப்பதால் அந்தக் காலத்தில் மலேசிய வானொலியில் தடை செய்யப்பட்டது.


        ஒரு சமயம் கண்ணதாசன்,விஸ்வநாதன் ராமமூர்த்தி மற்றும் பீம்சிங் ஆகியோர் பழனி படத்தின் பாடலை எழுதுவதற்காக ஸ்டுடியோவில் உட்கார்ந்திருந்தனர் அங்கே வேலை செய்யும் ஒரு பையன் ஒரு foregin whiskey பாட்டிலை எடுத்துக்கொண்டு சென்றான்.நம் கவிஞரோ அந்த பாட்டில் என்ன விலை என்றார்.1500 ரூபாய் என்றார் அவரிடம் வெறும் 500 ரூபாய்தான் இருந்தது உடனே அவருடைய அண்ணனுக்கு போன் செய்து எனக்கு 1000 ரூபாய் முன் பணமாக இந்த படத்திற்கு பாட்டு எழுத கேட்டார்.அந்தப் படத்தின் தயாரிப்பாளர் அவருடைய அண்ணன் AL ஸ்ரீனிவாசன். குடிப்பதற்கு பணம் தர மாட்டேன் என்று சொல்லி மறுத்து விட்டார்.

 கோபத்துடன் வந்து பாடல் எழுத அமர்ந்தார்.வழக்கம்போல் படத்தின் சூழ்நிலையும் அவரின் வாழ்க்கை சூழ்நிலையும் ஒன்றாக அமைந்தது. கோபத்தில் எழுதினாலும் அந்த பாடல் என்றும் நம் மனதில் மறவாமல் இருக்கிறது. Kannadasan,Sivaji


படம் : பழனி (1965)அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே
ஆசை கொள்வதில் அர்த்தமென்னடா காசில்லாதவன் குடும்பத்திலே
தாயும் பிள்ளையும் ஆனபோதிலும் வாயும் வயிறும் வேறடா
சந்தை கூட்டத்தில் வந்த மந்தையில் சொந்தமென்பதேதடா 

மனிதசாதியில் துயரம் யாவுமே மனதினால் வந்த நோய்யடா
வாழும் நாளிலே கூட்டம்கூட்டமாய் வந்துசேர்கிறார் பாரடா
கை வறண்ட வீட்டிலை உடைந்த பானையை 
மதித்து வந்தவர் யாரடா மதித்து வந்தவர் யாரடா

பணத்தின் மீதுதான் பக்தி என்றபின் பந்த பாசமே ஏனடா
பகைக்கும் நெஞ்சிலை அணைக்கும் யாவரும் 
அண்ணன் தம்பிதானடா அண்ணன் தம்பிதானடா

இன்னொரு பதிவில் சந்திப்போம்.

9 comments:

 1. உங்களின் தளம் பற்றிய சிறு விளக்கம்
  காண:http://blogintamil.blogspot.in/2013/03/blog-post_16.html

  ReplyDelete
  Replies
  1. என்னை அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி..

   Delete
 2. ஒரு பாடலுக்குள் இவ்வளவு செய்திகளா ? தகவலுக்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. இன்னும் நிறைய பாடல் இதுபோல் உள்ளது.விரைவில் அவற்றை எழுதுகிறேன்

   Delete
 3. நல்லதொரு பாடல் ரசிகர் கிடைத்து விட்டார்...

  வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Followers ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

  ReplyDelete
  Replies
  1. தொடர்வதற்கு மிக்க நன்றி.

   Delete
 4. கண்ணதாசன் பற்றிய பகிர்வுக்கு நன்றிஎனக்கு மிகவும் பிடித்த விஷயங்கள் ப்ளாகில் பழைய பாடல்களை பகிர்வுக்கும் நன்றி

  ReplyDelete
  Replies
  1. இன்னும் நிறைய எழுதுவேன்.உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி

   Delete
 5. எழுதுவதற்கு ஆயிரம் பதிவுகள் இருந்தும் படிப்பதற்கு யாரும் இல்லையோ என்று நினைத்திருந்தேன். என் பதிவை படித்தவர்க்கும்/தொடர்பவர்க்கும் மிக்க நன்றி.

  ReplyDelete

 
 • தமிழ் ஆவணம்